குலாப் ஜாமுன் செய்ய தேவையான பொருட்கள்:

  •  1 கப்  பால் பவுடர்
  •  ½ கப் மைதா
  •  ½ ஸ்பூன்  சமையல் சோடா
  •  2 ஸ்பூன்  உருக்கிய வெண்ணெய்
  •  பால் தேவைக்கேற்ப
  •  எண்ணெய் பொரிப்பதற்கு

சர்க்கரை பாகு செய்வதற்கு தேவையான பொருட்கள்:

  •  2 கப் சர்க்கரை
  •  1 கப் தண்ணீர்
  •  2 ஏலக்காய்

சர்க்கரை பாகு செய்முறை:

முதலில் மேலே கொடுத்துள்ள சர்க்கரை பாகு பொருட்களை ஒன்றாகக் கலந்து சர்க்கரை நன்றாக தண்ணீரில் கரையும் வரை சூடு செய்யவும்.

ஜாமுன் செய்முறை:

           ஒரு பாத்திரத்தில் பால் பவுடர், சமையல் சோடா, மைதா, வெண்ணெய் எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும்.

           இதில் தேவையான அளவு பால் ஊற்றி மென்மையாக பிசைந்து கொள்ளவும். பிசைந்த உருண்டையை சிறிது நேரம் அப்படியே வைக்கவும்.

           உருண்டையை 16 – 20 பாகங்களாகப் பிரித்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

           கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் சூடு செய்யவும். எண்ணெய் சூடானதும் அதில் உருண்டைகளைப் போட்டு பொரித்து எடுக்கவும்.

          அடுப்பை மிதமான சூட்டில் வைக்க வேண்டும். குலாப் ஜாமுன் மெதுவாக அடியிலிருந்து மேலே வர வேண்டும். பொன்னிறமானதும் மெதுவாக வெளியே எடுத்து சர்க்கரைப் பாகில் போடவும்.

         குலாப் ஜாமுனை 30 நிமிடங்கள் சர்க்கரைப் பாகிலையே விட்டு விடவும். பிறகு ருசியான குலாப் ஜாமுன் தயார் எடுத்து பரிமாறலாம்.