காரக்குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு

  •  2 ஸ்பூன் கடலை பருப்பு
  •  2 ஸ்பூன் தனியா
  •  கருவேப்பில்லை – தேவையான அளவு
  •  56 மிளகாய்
  •  ¼ ஸ்பூன் மிளகு
  •  3 ஸ்பூன் வெந்தயம்
  •  10 பூண்டு
  •  ½ஸ்பூன் ஜீரகம்
  •  கடலை எண்ணெய் தேவையான அளவு

குழம்பு:

  • கடலை எண்ணெய் தேவையான அளவு
  •  ¼  ஸ்பூன் கடுகு
  •  ¼ ஸ்பூன்  சீரகம்
  •  வெந்தயம் – சிறிதளவு
  •  சோம்பு – சிறிதளவு
  •  2 காய்ந்த மிளகாய்
  •  கருவேப்பில்லை – தேவையான அளவு
  •  200 கிராம்  வெங்காயம்
  •  12 பூண்டு
  •  200 கிராம் தக்காளி
  •  மஞ்ச தூள் சிறிதளவு
  •  2 ஸ்பூன்  தானிய
  •  ½ ஸ்பூன் மிளகாய் தூள்
  •  கொத்தமல்லி தேவையான அளவு
  •  2 ½ ஸ்பூன்  பேஸ்ட்
  •  உப்பு – தேவையான அளவு
  •  பெருங்காயம் தேவையான அளவு
  •  2 ஸ்பூன்  புளி  தண்ணி
  •  வெள்ளம் தேவையான அளவு
  •  100 கிராம்  சுண்டக்காய்
  •  நல்லெண்ணய் தேவையான அளவு

செய்முறை:

முதலில் தேவையான பொருட்களை தயார் செய்து வைத்துக்கொள்ளவும். சுண்டக்கா கார குழம்புக்கு முதலில் பேஸ்ட் அரைக்க வேண்டும்.

பிறகு அடுப்பில் கடாய் வைத்து கடலை பருப்பு, தனியா, கருவேப்பில்லை, மிளகாய், மிளகு, வெந்தயம், ஜீரகம் பூண்டு, மற்றும் கடலை எண்ணெய், சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்,

வருத்தத்தை தண்ணீர் ஊற்றி மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

சிறிதளவு கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், வெந்தயம், சோம்பு, காய்ந்த மிளகாய், கருவேப்பில்லை மற்றும் வெங்காயம் போட்டு வதக்கவும்.

பின்பு பூண்டு, தக்காளி, மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள், சிறிதளவு தண்ணீர் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

பின்பு அரைத்து வைத்துள்ள பேஸ்ட், உப்பு மற்றும்
பெருங்காயம் சேர்த்து கொதிக்க விடவும்.

குழம்பு கொதித்ததும் புளித்தண்ணீர் சிறிதளவு ஊற்றி , வெல்லம், சுண்டைக்காய் கொத்தமல்லி கடைசியாக சிறிதளவு நல்லெண்ணெய் சேர்க்கவும்.

இப்போது சூடான மற்றும் சுவையான சுண்டைக்காய் குழம்பு தயார்…