
“உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” துறையின் கீழ் சேலம் மாவட்டத்தில் பெறபட்ட மனுக்கள் தொடர்பான ஆலோனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தலைமையில் இன்று நடைபெற்றது.
அதில் 02. 07. 2021 வரை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் மொத்தம் 10, 560 மனுக்களும், ஊரக வளர்ச்சித்துறையில் மொத்தம் 2, 217 மனுக்களும், பேரூராட்சிகள் துறையில் மொத்தம் 255 மனுக்களும், நகராட்சி நிர்வாகம் துறையின் சார்பில் மொத்தம் 244 மனுக்களும், மாவட்டத்தில் உள்ள பிற துறைகளில் மொத்தம் 9, 046 மனுக்களும், அரசின் தலைமை துறை மற்றும் பிற மாவட்டங்களின் சார்பில் மொத்தம் 620 மனுக்களும், ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிலுவை மனுக்கள் மொத்தம் 1,336 மனுக்கள் என மொத்தம் 24, 278 மனுக்கள் வரப்பெற்றது.
இதனை அந்தந்த துறை அலுவலர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டு மனுக்கள் மீது உடனடி தீர்வு காண வேண்டுமென துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் இம்மனுக்கள் குறித்து துறை வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இம்மனுக்களுக்கு துறை அலுவலர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து தங்கள் துறையில் உள்ள மனுக்களுக்கு உடனடி தீர்வு காண வேண்டும்.
தகுதியான பயனாளிகளுக்கு உரிய உதவிகளை உடனுக்குடன் வழங்கிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.
