சேலம் மாவட்டம் மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அருள் இன்று தனது சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செட்டிசாவடி காந்திநகர் , திருவாக்கவுண்டவுர் மாரியம்மன் கோவில் தெரு மற்றும் மூலக்காடுபள்ளம்,ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களின் நீண்ட நாள் கோரியான குடிநீர் பிரச்சினையைப் போக்க ஏற்பாடு செய்யப்பட்ட  குடிநீர் குழாய் போடும் பணியை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் 23வது கோட்டதிற்கு உட்பட்ட பகுதியில் குடிநீரில் சாக்கடை தண்ணிருடன் கலந்து வருகிறது என பொதுமக்கள் புகார் கூறினார்கள் உடனடியாக நேரில் சென்று குழாய் நீரை குடித்து பார்த்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுத்ததுடன் அப்பகுதிக்கு சாலை கூடிய விரைவில் போடப்படும் என தெரிவித்தார்.

பிறகு  23,18,19வது கோட்டத்திற்கு சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து அப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மயானத்தை சீர்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கையின் மீது விரைவில் சட்டமன்ற நிதியில் இருந்து நிதி ஒதுக்கி சீரமைத்து தருவதாக வாக்குறுதியளித்தார். ஆய்வுக்கு சென்ற பகுதிகளில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்த  மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.