கன்னங்குறிச்சி பேரூராட்சி மெயின் ரோட்டில் ஜன நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முன்புறம் குளம் போல் மழை நீரும் சாக்கடை நீரும் மருத்துவ அலுவலர்களின் குடியிருப்பு வளாகம் முழுவதும் தேங்கியுள்ளது.இந்த மாசுபட்ட நீர் கொசு மட்டும் புழு பூச்சி உற்பத்தி வளாகமாக திகழுகிறது.இதற்கு அருகில் அரசினர் மேல்நிலைப் பள்ளியும் உள்ளது. எதிர்புறத்தில் இருபக்கமும் இறந்த கோழி மட்டும் இறைச்சி கழிவுகளை மூட்டை மூட்டையாக இரவு மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத நேரங்களில் நடைபாதை ஓரமாகவே கொட்டிவிட்டுச் செல்கின்றனர். கொட்டப்படும் கழிவுகளின் காரணமாக அந்த பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது.இந்த விஷமிகளை தடுத்து சுகாதார பணியினை சுகாதார அலுவலர்கள் மேற்கொள்வார்களா?