சேலம் மாநகராட்சி பகுதியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மளிகை, காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு அமலில் இருப்பினும் சேலத்தில் வாகனங்களில் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.காலை முதலே மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் 4 ரோடு, 5 ரோடு உள்ளிட்ட பகுதிகளில்  மோட்டார் சைக்கிள் மற்றும் கார்கள் அதிகளவில் இயங்கிக்கொண்டிருக்கிறது .அத்தியாவசிய தேவைக்கு தவிர வாகனங்களில் வரவேண்டாம் என போலீசார் எச்சரிக்கை செய்கின்றனர் .போலீசார் இல்லாமல் இருந்ததால் வாகன ஓட்டிகள் அடிக்கடி சென்று வந்தனர்.பொன்னம்மாபேட்டை ரெயில்வே கேட் பகுதியில் நேற்று காலை வாகனங்கள் அணிவகுத்து வரிசையில் நின்றன. இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதனால் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக சமூக அக்கறை உள்ளவர்கள் அச்சப்பட்டனர்.இதனை தடுக்க  காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.