
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் செவிலிய மாணவ மாணவியர்கள் அரசு மருத்துவமனையில் பயிற்சி பணியாற்றி வருகின்றனர்.இவர்களில் 4 பேருக்கு கொரானா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் முன்களப் பணியாளராக அறிவிக்கப்பட்டு இருந்தும் சரியான படுக்கை வசதி செய்யப்படாததால் தங்கள் நிலை கண்டு சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க முறையிட்டனர்.
