வேலூர் அருகே எதிா் கட்சி தலைவா் மு.க. ஸ்டாலின் சென்ற கார் விபத்துக்குள்ளானது
* 
திமுக பொருளாளரும், எதிர்க் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இதில் ஸ்டாலின் உள்பட யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை
.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா டோல்கேட் அருகே ஸ்டாலின் சென்ற காரின் குறுக்கே மற்றொரு கார் வந்ததால் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஸ்டாலின் உட்பட காரில் இருந்த யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.



தர்மபுரியில் நாளை நடைபெறவுள்ள திமுக மாவட்ட செயலாளர் சுப்பிரமணியின் மகன் திருமணத்தில் கலந்துக்கொள்ள கலந்து கொள்ள ஸ்டாலின் சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றார். அவரது கார் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா டோல்கேட் அருகே சென்றபோது, பின்னால் வந்த ஒரு தனியார் கார் அவரது காரை முந்திக் கொண்டு செல்ல முற்பட்டபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் காரில் சென்ற ஸ்டாலின் உள்பட யாருக்கும் காயமில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தைத் தொடர்ந்து எம்எல்ஏ காந்தி காரில் ஏறி ஸ்டாலின் தர்மபுரி புறப்பட்டுச் சென்றார்.

இதில் காரில் வந்தவரும், மோதியவரும் புகார் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
