சுவையான, எளிமையான கட்டி தால் செய்யலாம் வாங்க ..
கட்டி தால் செய்ய தேவையான பொருட்கள்:
- ½ cup துவரம் பருப்பு
- 1 இஞ்சி
- 5 பூண்டு
- 1 tbsp கரைத்த புளி
- 2 tsp மல்லி தூள்
- ¼ tsp மஞ்சள் தூள்
- 2 பச்சை மிளகாய்
- 1 தக்காளி
- 1 tsp மிளகாய் தூள்
- கொத்துமல்லி தழை
- 1 tsp வெல்லம்
கட்டி தால்செய்முறை:
கட்டி தால் செய்வதற்கு குக்கரில், நன்கு கழுவி சுத்தம் செய்த துவரம் பருப்பு அதனுடன் தேவையான அளவு தண்ணீர், பொடியாக நறுக்கிய தக்காளி, பூண்டு, இஞ்சி, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரை மூடி ஐந்து விசில் வரும் வரை மிதமான தீயில் வேகவைக்கவும்.
பருப்பு வெந்தவுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கரைத்த புளி, மிளகாய்த்தூள், மல்லித்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கிக்கிய பின்பு 10 நிமிடம் கொதிக்கவிடவும் .
10 நிமிடம் கழித்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலலை மற்றும் தூள் வெள்ளம் சேர்த்து நன்கு கலக்கிய எடுத்து வைக்கவும்
அடுத்து இந்த பருப்பை தாளிக்க, தாளிக்கும் கரண்டியில் நெய்,நசுக்கிய பூண்டு, சீரகம், பெருங்காயத்தூள் மற்றும் காய்ந்த சிவப்பு மிளகாய் சேர்த்து நன்றாக கலக்கவும்.
பின்பு பருப்பு கலவையில் சேர்த்து பரிமாறவும் சுவையான மற்றும் எளிமையான கட்டி தால் தயார்.
