பொதுவாக மதிய வேளையில் அனைவரும் சாதத்துடன் முதலில் சேர்த்து சாப்பிடுவது சாம்பார்.சாம்பார் அனைத்து வகையான உணவுகளுடனும் சேர்த்து சாப்பிட உகந்தது.
சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு – 1
கப் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – சிறிதளவு
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
கருவேப்பிலை – சிறிதளவு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 12
தக்காளி – 2
கேரட் – 2
பீன்ஸ் – 150 கிராம்
கத்திரிக்காய் – 150 கிராம்
உப்பு – சிறிதளவு
சாம்பார் பொடி – 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
புளி தண்ணீர் – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு
சமைக்க ஆகும் நேரம் – 15 நிமிடம்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 4
சாம்பார் செய்முறை:
முதலில் ஒரு கின்னத்தில் துவரம்பருப்பு போட்டு கழுவி அதனை குக்கரில் போட்டு 4 விசில் வரை வேக வைக்கவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,வெந்தயம், காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து கலந்து கொள்ளவும்.
பிறகு அதனுடன் முழு சின்ன வெங்காயம் நறுக்காமல் போட வேண்டும். பிறகு அதனுடன் நமக்கு எந்த எந்த காய்கறி வேண்டுமோ அதனை சேர்த்துக்கொள்ளவும். அதனை உப்பு போட்டு நன்றாக கலந்து விடவும்.

பிறகு அதனுடன் மிளகாய்த்தூள், சாம்பார் பொடி சேர்த்து அதனுடன் கரைத்து வாய்த்த புளி கரைசல் சேர்த்து கொதிக்கவிட்டு அதன் இடையில் நாம் ஏற்கனவே வேகவைத்த பருப்பினை கொட்டி நன்றாக கொதிக்க விடவும். பிறகு 10 நிமிடம் கழித்து கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான சாம்பார் தயார்.
