ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ராம்குமாரின் உடலை வரும் 30-ம் தேதி வரை பாதுகாக்க உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்றம். பிரேத பரிசோதனையில் தனியார் மருத்துவரை சேர்க்கக்கோரிய மனுவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்ய இருப்பதால் கால அவகாசம் கேட்டிருந்தார் ராம்குமாரின் தந்தை.
