வெங்கடேச பண்ணையாரின் 13-வது நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடி முழுவதும் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது மாவட்ட நிர்வாகம். வரும் 25-ம் தேதி மாலை 6 மணி முதல் 27-ம் தேதி காலை 6 மணி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும். பதற்ற பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட இருக்கிறது.
