*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_புரடாசி 14_*

*_30.09.2018_*
*_ஞாயிற்றுக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம் :-*

உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் மூலம் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். சாமர்த்தியமான பேச்சால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். மாணவர்களுக்கு உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அசுவினி : மகிழ்ச்சியான நாள்.
பரணி : முன்னேற்றம் உண்டாகும்.
கிருத்திகை : கீர்த்தி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம் :-*

புதுவிதமான முயற்சிகளால் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணிபுரியும் இடங்களில் திருப்தியான சூழல் அமையும். சிக்கலான சில விஷயங்களையும் சாதுர்யமாக பேசி முடித்து விடுவீர்கள். வீண் பயத்தை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் கோபமான பேச்சுக்களை தவிர்ப்பது நன்மையை தரும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்

கிருத்திகை : அனுகூலமான நாள்.
ரோகிணி : மரியாதை உயரும்.
மிருகசீரிடம் : கோபத்தை தவிர்ப்பது நல்லது.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம் :-*

எந்த செயலையும் செய்யும் முன்பு சிந்தித்து செயல்படவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். சொத்து சம்பந்தமான செயல்களில் நிதானம் வேண்டும். பிறருக்கு உதவுவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிடம் : சிந்தித்து செயல்படவும்.
திருவாதிரை : புரிதல் உண்டாகும்.
புனர்பூசம் : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம் :-*

மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான செயல்களில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பொதுநலம் சம்பந்தமான செயல்களில் தேவையான ஆதரவு கிடைக்கும். செய்தொழிலில் மேன்மையான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

புனர்பூசம் : தெளிவு பிறக்கும்.
பூசம் : இலாபம் கிடைக்கும்.
ஆயில்யம் : மேன்மை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம் :-*

தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான செயல்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். சாதுர்யமாக பேசுவதன் மூலம் வாடிக்கையாளர்களின் ஆதரவு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் பொருட்களை கவனமாக கையாளவும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் ஒருவிதமான கவலை தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மகம் : எண்ணங்கள் நிறைவேறும்.
பூரம் : ஆதரவு அதிகரிக்கும்.
உத்திரம் : கவலைகள் நீங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி :-*

உத்தியோகம் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தரர்கள் தங்களின் புத்திக்கூர்மையால் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவார்கள். வீண் செலவைக் குறைத்து சேமிப்பை அதிகரிப்பீர்கள். தனவரவு எதிர்பார்த்தப்படி இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். எண்ணிய செயல்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : பயணங்கள் சாதகமாகும்.
அஸ்தம் : பாராட்டு கிடைக்கும்.
சித்திரை : எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம் :-*

ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த உயர் பதவி கிடைப்பதற்கு காலதாமதமாகும். அரசு தொடர்பான காரியங்களால் விரயம் உண்டாகும். தொழில் சம்பந்தமான போட்டிகள் அதிகரிக்கும். சந்திராஷ்டம தினம் என்பதால் செய்யும் வேலைகளில் கவனம் தேவை. தேவையற்ற அலைச்சல்களால் உடல் சோர்வு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

சித்திரை : விரயம் உண்டாகும்.
சுவாதி : போட்டிகள் அதிகரிக்கும்.
விசாகம் : சோர்வு உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம் :-*

மனதில் புதுவிதமான நம்பிக்கை பிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். புதிய சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வர்த்தகம் சம்பந்தமான கொடுக்கல், வாங்கல்கள் திருப்திகரமாக இருக்கும். சுபச்செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

விசாகம் : புதிய நம்பிக்கை பிறக்கும்.
அனுஷம் : புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
கேட்டை : ஆர்வம் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு :-*

உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் மனக்கசப்புகள் ஏற்படக்கூடும். முக்கியமான செயல்களில் நிதானமாக செயல்படுவது நல்லது. உழைப்பிற்கேற்ற பலன்கள் கிடைக்க காலதாமதமாகும். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுபாதிப்புகள் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : நிதானத்துடன் செயல்படவும்.
பூராடம் : பேச்சில் கவனம் தேவை.
உத்திராடம் : எதிர்பார்த்த பலன்கள் கிடைக்க காலதாமதமாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம் :-*

பிள்ளைகளின் மூலம் மனமகிழ்ச்சி உண்டாகும். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் அனுகூலமான முடிவுகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பாக சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். தொழிலில் இருந்த பிரச்சனைகள் குறைந்து புதுவிதமான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் புதிய உறுப்பினர்களின் வருகை ஏற்படலாம். பூர்வீக சொத்துகளால் ஆதாயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : மனமகிழ்ச்சி உண்டாகும்.
திருவோணம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
அவிட்டம் : ஆதாயம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம் :-*

திட்டமிட்ட முயற்சிகளில் பல இன்னல்கள் தோன்றும். எதிர்பார்த்த பயணங்கள் காலதாமதமாகும். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பெரியோர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் புதுவிதமான மாற்றங்களை செய்வீர்கள். சொத்து பிரிவினைகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அவிட்டம் : வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
சதயம் : மாற்றம் உண்டாகும்.
பூரட்டாதி : கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம் :-*

தொழில் சார்ந்த முதலீடுகளில் நிதானமாக செயல்படுவது நல்லது. பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணி நிமிர்த்தமான வீண் அலைச்சல்கள் உண்டாகும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாகும். மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உடன்பிறப்புகளின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

பூரட்டாதி : நிதானமாக செயல்படவும்.
உத்திரட்டாதி : வீண் அலைச்சல்கள் உண்டாகும்.
ரேவதி : இடமாற்றம் சாதகமாகும்.

•┈┈•❀??????❀•┈┈•