*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_புரடாசி 13_*

*_29.09.2018_*
*_சனிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம் :-*

புதிய முயற்சிகளை நன்கு ஆலோசித்தப்பிறகு செயல்படுத்துவது நல்லது. கூட்டாளிகளிடமும், நண்பர்களிடமும் அமைதியாக நடந்து கொள்ளவும். பழைய கடன்களை அடைப்பதற்கான தனவரவு கிடைக்கும். உடல்சோர்வு நீங்கி தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பயணங்களால் நன்மை உண்டாகும். பெரியோர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அசுவினி : ஆலோசனைகள் கிடைக்கும்.
பரணி : தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.
கிருத்திகை : நிதானம் தேவை.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம் :-*

உறவினர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதுவிதமான யுக்திகளை புகுத்தி இலாபத்தைப் பெருக்குவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்களின் திறமைகள் வெளிப்பட்டு பாராட்டுகளை பெறுவீர்கள். புதிய சொத்துகளை வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களால் மனதில் உற்சாகம் பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.
ரோகிணி : இலாபம் அதிகரிக்கும்.
மிருகசீரிடம் : உற்சாகம் பிறக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம் :-*

மறைமுகத் தடைகளை தகர்த்து வெற்றி காண்பீர்கள். விளையாட்டில் சாதனை புரிவதற்கான சூழல் அமையும். தாய்வழி உறவுகளிடம் நிதானத்தை கடைபிடிக்கவும். செய்யும் பணிகளில் பொறுப்புடனும், கவனத்துடனும் செயல்படுவது மேன்மையை தரும். நிலுவையில் இருந்த தனவரவுகள் வசூலாகும். குடும்பத்திலுள்ள உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மிருகசீரிடம் : வெற்றி காண்பீர்கள்.
திருவாதிரை : தனவரவுகள் வசூலாகும்.
புனர்பூசம் : கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம் :-*

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாதுர்யமாக செயல்பட்டு எதிர்பார்த்த வெற்றியை அடைவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் திருப்திகரமாக இருக்கும். மனதில் இருந்த ஒருவிதமான தயக்கம் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : வெற்றி கிடைக்கும்.
பூசம் : மகிழ்ச்சி உண்டாகும்.
ஆயில்யம் : திருப்திகரமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம் :-*

புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். பொருட்சேர்க்கை உண்டாகும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபார அபிவிருத்தி உண்டாகும். குடும்பத்தில் உங்களது வார்த்தைக்கு மதிப்புகள் அதிகரிக்கும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடித்து பாராட்டுக்களைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மகம் : சிந்தனைகள் மேம்படும்.
பூரம் : வியாபார அபிவிருத்தி உண்டாகும்.
உத்திரம் : மதிப்பு அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி :-*

தேவையான பண உதவிகள் கிடைக்கும். நிலுவையில் இருந்த தனவரவுகள் வந்து சேரும். வெளியூர் மற்றும் வெளிநாடு செல்ல எடுக்கும் முயற்சிகள் சாதகமான முடிவுகளை தரும். மனக்கவலையால் சோர்வு உண்டாகும். வாகனங்களில் செல்லும்போது நிதானம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறமைகள் வெளிப்படுவதற்கான சூழல் அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.
அஸ்தம் : முயற்சிகள் சாதகமாகும்.
சித்திரை : கவனம் தேவை.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம் :-*

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல்களும், பொறுப்புகளும் ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது நன்மை தரும். எதிலும் பதற்றமின்றி நிதானத்துடன் செயல்படவும். காரியங்களில் காலதாமதம் உண்டாகும். மற்றவர்களின் பேச்சைக்கேட்டு எதிலும் ஈடுபடுவதற்கு முன் சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : வீண் அலைச்சல்கள் ஏற்படும்.
சுவாதி : அனுசரித்துச் செல்லவும்.
விசாகம் : நிதானத்துடன் செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம் :-*

கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். அரசாங்கத்தின் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் இனிதாக நடந்து முடியும். புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் சாதகமான நிலை அமையும். நினைத்த காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

விசாகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
அனுஷம் : முயற்சிகள் கைகூடும்.
கேட்டை : இலாபம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு :-*

எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நன்மை தரும். பணியில் இருந்த எதிர்ப்புகள் விலகும். மனோ தைரியம் அதிகரிக்கும். கோபத்தை கட்டுப்படுத்துவது நன்மை தரும். உங்களைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மூலம் : பணத்தேவை அதிகரிக்கும்.
பூராடம் : தைரியம் அதிகரிக்கும்.
உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம் :-*

எந்த வேலையையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும். நிர்வாகத்திறமை வெளிப்படும். சுப காரியங்கள் கைகூடும். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமில்லாத இடமாற்றம் உண்டாகலாம். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திராடம் : வெற்றி கிடைக்கும்.
திருவோணம் : திறமைகள் வெளிப்படும்.
அவிட்டம் : இடமாற்றம் ஏற்படலாம்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம் :-*

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். பழைய பாக்கிகள் வசூலாவதில் காலதாமதம் நேரிடலாம். வாகனச் சேர்க்கையால் மகிழ்ச்சி பிறக்கும். நீண்ட நாட்களாக இழுபறியான வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தாயின் உடல்நிலையில் கவனம் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அவிட்டம் : நெருக்கம் அதிகரிக்கும்.
சதயம் : மகிழ்ச்சியான நாள்.
பூரட்டாதி : புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம் :-*

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்ப்புகளால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். ஆன்மீக எண்ணங்கள் மனதிற்கு நிம்மதியைத் தரும். எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நன்மை தரும். நண்பர்களுக்கிடையே இருந்துவந்த பிணக்குகள் நீங்கி நட்பு மலரும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

பூரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.
உத்திரட்டாதி : முன்னேற்றமான நாள்.
ரேவதி : நட்பு மலரும்.

•┈┈•❀??????❀•┈┈•