*_??முத்தமிழ்??_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_ஆடி 13_*

*_29.07.2018_*
*_ஞாயிற்றுக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம் :-*

உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். பொருட்களை கையாளும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும். தொழிலில் பொருள் தேக்கநிலை உண்டாகும். ஞான உபதேசங்களால் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

அசுவினி : அனுசரித்து செல்லவும்.
பரணி : பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும்.
கிருத்திகை : குழப்பங்கள் நீங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம் :-*

செய்தொழிலில் மேன்மை அடைவதற்கான புதிய யுக்திகளை கையாளுவீர்கள். வெளிவட்டாரங்களில் உங்களின் செல்வாக்கு உயரும். புதிய வாகனச்சேர்க்கை ஏற்படும். தலைமைப் பதவியில் உள்ளவர்கள் கவனத்துடன் செயல்படவும். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

கிருத்திகை : மேன்மையான நாள்.
ரோகிணி : செல்வாக்கு உயரும்.
மிருகசீரிடம் : மகிழ்ச்சி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம் :-*

போட்டியில் எண்ணிய வெற்றி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். ஆடைச்சேர்க்கை உண்டாகும். புனித யாத்திரை செல்வதற்காக திட்டமிடுவீர்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். மனதில் இனம் புரியாத புதிய எண்ணங்கள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மிருகசீரிடம் : வெற்றி கிடைக்கும்.
திருவாதிரை : விருப்பங்கள் நிறைவேறும்.
புனர்பூசம் : கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம் :-*

புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். சாதுர்யமான பேச்சுகளால் இலாபம் அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையேயான உறவு மேம்படும். புதிய எண்ணங்களுக்கு செயல்திட்டம் தீட்டி அதனை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். உத்தியோகஸ்தரர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

புனர்பூசம் : புதிய நட்பு கிடைக்கும்.
பூசம் : இலாபம் உண்டாகும்.
ஆயில்யம் : உறவு மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம் :-*

புதிய உறுப்பினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உடல்நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி நலம் உண்டாகும். பொருள் சேர்ப்பதற்கான கலையறிவு அதிகரிக்கும். தாய் வழி உறவுகளின் ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

மகம் : உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
பூரம் : இன்னல்கள் நீங்கும்.
உத்திரம் : புத்திக்கூர்மை மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*கன்னி :-*

அறிவார்ந்த வித்தைகளால் பெருமை அடைவீர்கள். புண்ணிய யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். எந்தவொரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். வெளியூர் பயணம் வீண் அலைச்சலை உண்டாக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் வந்தடையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

உத்திரம் : பெருமை அடைவீர்கள்.
அஸ்தம் : அமைதியை கடைபிடிக்கவும்.
சித்திரை : சுபச் செய்திகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம் :-*

வாக்குவன்மையால் பொருளாதார நிலை உயரும். இழந்த பொருளை மீட்பதற்கான சூழ்நிலை அமையும். ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் விருந்தில் பங்கேற்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். இழுபறியான வேலைகள் இனிதே நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : தேன் நிறம்

சித்திரை : பொருளாதாரம் மேம்படும்.
சுவாதி : மதிப்பு உயரும்.
விசாகம் : சுபிட்சமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம் :-*

இளைய உடன்பிறப்புகளின் ஆதரவால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். புதிய மனைகள் வாங்குவதற்கான செயல்திட்டம் தீட்டுவீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

விசாகம் : மேன்மையான நாள்.
அனுஷம் : மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
கேட்டை : முன்னேற்றம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு :-*

பூர்வீக சொத்துகளால் சுப விரயம் உண்டாகும். புத்திரர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களால் சுப விரயம் ஏற்படும். மனக் குழப்பத்தால் வேலையில் மந்தத்தன்மை உண்டாகும். மனைவியிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர் விவாதங்களை தவிர்த்தல் நல்லது.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : ஆதரவான நாள்.
பூராடம் : சுப விரயம் ஏற்படும்.
உத்திராடம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம் :-*

ஆலய வழிபாட்டை மேற்கொள்வீர்கள். பிறருக்கு உதவி செய்வதால் மனமகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். நீர்வள மேலாண்மையால் மேன்மை உண்டாகும். மனக்கவலைகள் தீர்ந்து புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். பொதுநல எண்ணங்கள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

உத்திராடம் : ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.
திருவோணம் : முன்னேற்றமான நாள்.
அவிட்டம் : புத்துணர்ச்சி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம் :-*

உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தொழில் சார்ந்த அலைச்சல்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் நிதானத்தை கடைபிடிக்கவும். புதிய எண்ணங்களால் மனக்கவலைகள் உண்டாகும். மனதில் உள்ள எண்ணங்களை பிறரிடம் பகிர்வதில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
சதயம் : அலைச்சல்கள் உண்டாகும்.
பூரட்டாதி : மனக்கவலைகள் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம் :-*

விவாதங்களில் எண்ணிய முடிவு கிடைக்கும். மேலதிகாரிகளால் சாதகமான சூழல் ஏற்படும். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். புதிய இடங்களுக்கு பயணங்களை மேற்கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். உறவினர்களால் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

பூரட்டாதி : விவாதங்களால் இலாபம் உண்டாகும்.
உத்திரட்டாதி : பாராட்டப்படுவீர்கள்.
ரேவதி : மகிழ்ச்சியான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•