*_???முத்தமிழ்???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_ஆடி 14_*

*_30.07.2018_*
*_திங்கட்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம் :-*

வாரிசுகள் உங்கள் போல் நடந்து கொள்வார்கள். மனைவி வழி உறவுகளால் சாதகமான சூழல் உண்டாகும். தாயின் ஆதரவு கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்களால் மகிழ்ச்சியான சூழல் அமையும். பணிபுரியும் இடங்களில் உங்களின் நிர்வாக திறமை வெளிப்படும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அசுவினி : விருப்பங்கள் நிறைவேறும்.
பரணி : சாதகமான நாள்.
கிருத்திகை : இலாபம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம் :-*

திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தன்னம்பிக்கையுடன் பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இழந்த செல்வாக்கை திரும்ப பெறுவீர்கள். செய்யும் செயல்களில் கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாட்களால் கவலைகள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

கிருத்திகை : சிறப்பான நாள்.
ரோகிணி : தன்னம்பிக்கை மேம்படும்.
மிருகசீரிடம் : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம் :-*

பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். மேலதிகாரிகளிடம் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வாக்குறுதியைக் காப்பாற்ற துரிதமாக செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மிருகசீரிடம் : செயல்வேகம் அதிகரிக்கும்.
திருவாதிரை : அனுசரித்து செல்லவும்.
புனர்பூசம் : நம்பிக்கை மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம் :-*

குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வு காண்பீர்கள். நண்பர்கள் வழியில் சுப செய்திகள் வந்தடையும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில் சம்பந்தமான முடிவுகளில் கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

புனர்பூசம் : இன்னல்கள் நீங்கும்.
பூசம் : சுபிட்சமான நாள்.
ஆயில்யம் : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம் :-*

திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். வியாபாரத்தில் நீங்கள் செய்யும் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் அமைதியான சூழல் நிலவும். அலைச்சல், கோபம் யாவும் நீங்கும். எதிர்பார்த்த தனவரவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : கரும்பச்சை

மகம் : காரியசித்தி உண்டாகும்.
பூரம் : எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள்.
உத்திரம் : வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்வீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி :-*

உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளின் அறிவுரைகள் கிடைக்கும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். வெளியூரிலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கும். புனித யாத்திரை சென்று வருவீர்கள். கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

உத்திரம் : அறிவுரைகளால் அனுகூலம் உண்டாகும்.
அஸ்தம் : இலாபகரமான நாள்.
சித்திரை : எண்ணங்கள் ஈடேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம் :-*

சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் பாராட்டு கிடைக்கும். உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டுவிட்டு சிந்தித்து பேசுவீர்கள். எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

சித்திரை : சுபச் செயல்கள் கைகூடும்.
சுவாதி : ஆதரவு கிடைக்கும்.
விசாகம் : பாராட்டப்படுவீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம் :-*

இளைய உடன்பிறப்புகளால் சாதகமான பலன்கள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். தொழிலில் புதிய அணுகுமுறைகளை கையாண்டு இலாபம் ஈட்டுவீர்கள். தடைகளை கடந்து முன்னேறுவீர்கள். நிர்வாகம் சம்பந்தமான முக்கிய முடிவுகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : உடன்பிறப்புகளால் நன்மை உண்டாகும்.
அனுஷம் : வெற்றி கிடைக்கும்.
கேட்டை : முன்னேற்றமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு :-*

மறதியால் பிரச்சனைகள் ஏற்பட்டு சரியாகும். கணவன், மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து விலகும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். பண விஷயத்தில் எச்சரிக்கை வேண்டும். வியாபாரத்தில் போராடி இலாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மூலம் : பிரச்சனைகளை சரிசெய்வீர்கள்.
பூராடம் : குழப்பங்கள் நீங்கும்.
உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம் :-*

நண்பர்களின் மூலம் எதிர்பாராத தனலாபம் உண்டாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களின் கோரிக்கையை ஏற்பார்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

உத்திராடம் : தனலாபம் உண்டாகும்.
திருவோணம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
அவிட்டம் : கலகலப்பான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம் :-*

வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உண்டாகும். துணிச்சலுடன் செய்த செயல்களால் பாராட்டப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

அவிட்டம் : சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
சதயம் : எண்ணங்கள் ஈடேறும்.
பூரட்டாதி : பாராட்டு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம் :-*

மாணவர்களின் நினைவாற்றல் மேம்படும். தைரியத்துடன் சில செயல்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பழைய கடன்கள் வசூலாகும். பணியில் மேன்மையான சூழ்நிலை உண்டாகும். கலைஞர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

பூரட்டாதி : நினைவாற்றல் மேம்படும்.
உத்திரட்டாதி : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
ரேவதி : திறமைகள் வெளிப்படும்.

•┈┈•❀??????❀•┈┈•