*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_புரடாசி 05_*
*_21.09.2018_*
*_வெள்ளிக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம் :-*
வெளியூர் பயணங்களால் மேன்மையான சூழல் உண்டாகும். கால்நடைகளிடம் எச்சரிக்கையுடன் இருக்கவும். பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களுடன் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்த்து அனுசரித்து நடந்து கொள்ளவும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அசுவினி : பயணங்களால் மேன்மை உண்டாகும்.
பரணி : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
கிருத்திகை : சிந்தித்து செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம் :-*
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். தானிய சம்பத்துக்களால் இலாபம் உண்டாகும். சிந்தனையின் போக்கில் முன்னேற்றம் ஏற்படும். மனக்கவலையால் வேலையில் கவனமின்றி வசைச் சொற்களுக்கு ஆளாக நேரிடும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : மகிழ்ச்சி உண்டாகும்.
ரோகிணி : இலாபம் கிடைக்கும்.
மிருகசீரிடம் : கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம் :-*
கூட்டாளிகளின் உதவியால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். மனதில் உள்ள கவலைகள் நீங்கும். பிறரிடம் எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். புதிய வேலைக்கான வாய்ப்புகள் சாதகமான முடிவைத் தரும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
மிருகசீரிடம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
திருவாதிரை : சோர்வு நீங்கும்.
புனர்பூசம் : வெற்றி கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம் :-*
புதிய வாகனங்களை வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். உயர்கல்வி பயிலும் மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். புதுவிதமான தொழில் நுட்ப வித்தைகளை பயில முயல்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
புனர்பூசம் : முயற்சிகள் கைகூடும்.
பூசம் : புத்திக்கூர்மை வெளிப்படும்.
ஆயில்யம் : புதிய வித்தைகளை பயில்வீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம் :-*
குடும்பத்தில் புதிய உறுப்பினர்களின் வருகை உண்டாகும். சமூக சேவை புரிபவர்களுக்கு சாதகமற்ற சூழல் உண்டாகும். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உயர்கல்வி பயில்வோரின் திறமைகளுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூரம் : சாதகமற்ற சூழல் உண்டாகும்.
உத்திரம் : அங்கீகாரம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி :-*
தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு ஜெயம் காண்பீர்கள். பணிகளில் பொறுப்புகள் மற்றும் அதிகாரம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். அறச்செயல்களால் நற்பெயர் உண்டாகும். சுபச் செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
உத்திரம் : ஜெயம் காண்பீர்கள்.
அஸ்தம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
சித்திரை : நற்பெயர் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம் :-*
பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். வெளிநாட்டு பணி விவகாரங்களில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். கண்களில் ஏற்பட்ட உபாதைகளின் வீரியம் குறையும். உடன்பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் பொருட்சேர்க்கை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
சித்திரை : ஆசிர்வாதம் கிடைக்கும்.
சுவாதி : அனுகூலமான நாள்.
விசாகம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம் :-*
செயல்பாடுகளில் இருந்த இடர்பாடுகள் குறைந்து புத்துணர்ச்சி அடைவீர்கள். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். வழக்குகளில் இருந்த இழுபறிகள் குறைந்து சுமூகமான நிலை உருவாகும். தொழில் சம்பந்தமாக எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
விசாகம் : புத்துணர்ச்சி அடைவீர்கள்.
அனுஷம் : இழுபறிகள் நீங்கும்.
கேட்டை : ஆதரவு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு :-*
வாகனங்களால் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். விவாதங்களில் எண்ணிய முடிவு கிடைக்கும். உடல்நலத்தில் கவனம் வேண்டும். ஆன்மீக பணிகளை மேற்கொள்வதால் கீர்த்தி உண்டாகும். வாக்குறுதிகளை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : இலாபம் உண்டாகும்.
பூராடம் : சுமூகமான முடிவு கிடைக்கும்.
உத்திராடம் : கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம் :-*
தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் கிடைக்கும். எண்ணிய எண்ணங்களில் காரியசித்தி உண்டாகும். தொழிலில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உறவினர்களின் ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திராடம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
திருவோணம் : ஆதரவு கிடைக்கும்.
அவிட்டம் : மகிழ்ச்சி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம் :-*
தொழில் சம்பந்தமாக எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். திடீர் யோகத்தால் எதிர்பாராத வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். தாய்மாமன் உறவு மேம்படும். புதிய வேலைக்கான முயற்சிகள் எதிர்பார்த்த பலனை தரும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.
சதயம் : உறவுகள் மேம்படும்.
பூரட்டாதி : கீர்த்தி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம் :-*
நண்பர்களின் உதவியால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். புத்திரர்களால் சுபச் செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். வாதத்திறமையால் இலாபம் உண்டாகும். அந்நியர்களால் தன விருத்தி உண்டாகும். பெரியோர்களின் ஆசி கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
பூரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.
உத்திரட்டாதி : திறமையால் இலாபம் உண்டாகும்.
ரேவதி : தன விருத்தி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
