கிரிக்கெட் வீரர் தோனி தனது வாழ்க்கை பற்றிய ’எம்.எஸ்.தோனி – தி அன்டோல்ட் ஸ்டோரி’ படத்தை விளம்பரப்படுத்த சென்னை வந்துள்ளார். திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சி முடிந்ததும், நடிகர் ரஜினியை சந்தித்தார் அவர். தோனி, சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகராம். ரஜினியை சந்திக்க வேண்டும் என்பது அவரின் நீண்ட நாள் ஆசையாம்! தோனி கலந்துகொண்ட விழாவில், அப்படத்தில் தோனியாக நடித்திருந்த சுஷாந்த் சிங் ராஜ்புட் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். தொகுப்பாளினி திவ்யதர்ஷினி விழாவை தொகுத்து வழங்கினார். நடிகை ஜோதிகா அவரது குழந்தைகள் தியா, தேவுடன் கலந்துகொண்டார்.