ஜெயராம் பில்டர்ஸ் சார்பாக புகையிலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி
தமிழகத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புகையிலை, குட்கா, மது போன்ற போதைப் பொருட்கள் மிக எளிமையாக கிடைக்கும் வகையில் உள்ளது.
ஆகவே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அமைதிப் பேரணி நடைபெற்றது. இதில் 1000க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பெரியார் பல்கலைக்கழகம் துணை வேந்தர் குழந்தைவேலு மற்றும் Dro அருள் ஜோதி அரசன் அவர்களும் கலந்து கொண்டனர். இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை ஜெயராம் பில்டர்ஸ் உரிமையாளர் ஜெ.ம.சுமன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.


