அரசு உத்தரவுகளை உடனடியாக செயல்படுத்தும் அரூர் ஆய்வாளர்

     அனைத்து மோட்டார் வாகன ஹெட்லைட்டிலும் கருப்பு நிற ஸ்டிக்கரை 2 வாரத்தில் ஒட்ட உயர்நீதிமன்ற கிளை கடந்த திங்கட் கிழமை 04.03.2019 அன்று உத்தரவிட்டுள்ளது. கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்படுவதை உறுதிப்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ராம்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில், ஹெட்லைட்டில் கருப்புநிற ஸ்டிக்கர் ஒட்ட தவறும் உரிமையாளர்களின் வாகனத்தை பறிமுதல் செய்யலாமே என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.

   அரசு உத்தரவை நிறைவேற்றும் விதத்தில் அரூர் காவல் நிலைய ஆய்வாளர் Dr.T.கண்ணன் அவர்களின் தலைமையில் தன் காவல் நிலைய எல்லைக்குள் வரும் அனைத்து வாகனங்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் ஹெட்லைட்டில் கருப்பு நிற ஸ்டிக்கரை ஒட்டினார். அரூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பொறுப்பேற்ற சில தினங்களில் ஆய்வாளரின் இந்த நற் செயல் பொது மக்கள் அனைவராலும் பாராட்டும் விதமாக இருந்தது. காவல் துறை உங்கள் நண்பன் என்பதை நிருபிக்கும் வகையில் செயல் படும் ஆய்வாளர் Dr.T.Kannan-ன் இந்த செயலை நம்ம சேலம் மற்றும் முத்தமிழ் டிவி மனதார பாராட்டுகிறது.