சேலம் கோட்டை மைதானத்தில்  லியோனியின் பட்டிமன்றம்

மார்ச் 1 இளைஞர்களின் எழுச்சி நாளை முன்னிட்டு சேலம் கோட்டை மைதானத்தில் 03.03.2019 ஞாயிற்று கிழமை மாலை 5.00 மணிக்கு சேலம் மத்திய மாவட்ட திமுக மற்றும் சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு சார்பாக திண்டுக்கல் ஐ. லியோனியின் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. கழக தலைவர் தளபதியாரின் நிலைத்த புகழுக்கு பெரிதும் காரணம்அறிஞர் அண்ணாவின் கனிவா ? முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞரின் துணிவா ? என்ற தலைப்பில் நடை பெற்றது. இப் பட்டிமன்ற நிகழ்ச்சியை சேலம் மத்திய மாவட்ட கழக செயலாளரும், வடக்கு சட்ட மன்ற உறுப்பினருமான இரா.ராஜேந்திரன் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்சிக்கான ஏற்பாட்டினை குகை எம்.பாபு (எ) அப்துல்லா மற்றும் பச்சப்பட்டி A.முபாரக், G.ஷானவாஸ், H.அஜ்மல்கான், K.S. அறிவழகன், கார்பெட் மணி, வழக்கறிஞர் சதீஸ்குமார் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.

இது போன்ற சேலம் சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமா? பதிவு செய்ய வேண்டுமா? எப்போதும் இனைந்திருங்கள் www.oursalem.com மேலும் நம்ம பேஸ்புக் பேஜ்ஜை லைக் செய்ய ?இங்கே கிளிக்? செய்யவும்