அனைத்து விசேஷங்களிலும் தவறாமல் இடம்பெறும் ஒரு இனிப்பு வகை இதுவாகும். பொதுவாக அனைத்து பண்டிகை நாட்களிலும் இதனை நாம் வீட்டில் செய்து உறவினருக்கு குடுப்பது வழக்கம்.
பாதுஷா செய்ய தேவையான பொருட்கள்:
- மைதாமாவு – 200 கிராம்
- ஆப்ப சோடா – 1 டீஸ்பூன்
- வெண்ணைய் – 10 கிராம்
- சக்கரை – 3/4 கப்
- ஏலக்காய்த்தூள் – 1/4 ஸ்பூன்
பாதுஷா செய்முறை:
ஒரு கின்னத்தில் மைதாமாவு, ஆப்ப சோடா மற்றும் வெண்ணெய் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சரியான பதத்தில் பிசைந்து அதனை 10 நிமிடங்கள் வரை உலர வைக்கவும்.
பிறகு, ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி சக்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து சக்கரை பாகினை தயார் செய்து கொள்ளுங்கள். சக்கரை பாகு தயாரானதும் உலரவைத்த பாதுஷா மாவினை மீண்டும் கடாயில் போட்டு பாதுஷா மூழ்கும் அளவிற்கு எண்ணெய் ஊற்றி அதனை மிதமான சூட்டில் நன்றாக வேகவிடவும்.
பாதுஷா வெந்தவுடன் நாம் ஏற்கனவே தயார் செய்துள்ள சக்கரை பாகு பாத்திரத்தில் போட்டு 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து எடுத்தால் சுவையான பாதுஷா தயார்.