இந்த கிரேவி, இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு சூப்பர் காம்பினேஷன்.
தேவையான பொருள்கள்.

சோயா – ஒரு கப்
நறுக்கிய தக்காளி – 2
நறுக்கிய வெங்காயம் – 2
சோம்பு – சிறிதளவு
பட்டை – 2

அரைக்க:

தேங்காய் துருவல் – 3 ஸ்பூன்
இஞ்சி பூண்டு -பேஸ்ட் – 2 ஸ்பூன்
சோம்பு – சிறிதளவு
குழம்பு மிளகாய் தூள் – 3 ஸ்பூன்

முந்திரி – 5
 செய்முறை.
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயார்படுத்தி வைத்துக் கொள்ளவும்.
அரைக்க  கொடுத்துள்ள பொருட்களை அரைத்து கொள்ளவும்.சோயாவை சுடு தண்ணீரில் போட்டு 5 நிமிடம் வேக வைத்து குளிர்ந்த நீரில் கழுவவும்.

கடாயில் என்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை போட்டு வதக்கவும்.

பின்னர் வெங்காயம் போட்டு பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்.
அதன் பின்னர் தக்காளி போட்டு வதக்கவும்.
தக்காளியை நன்கு வெங்காயத்துடன் சேர்த்து கலக்கவும். பின் சோயாவையும் சேர்த்து வதக்கவும்.
பின் அதனுடன் அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து வதக்கவும்.
பச்சை வாசனை போகும் வரை, நன்கு கொதிக்க விடவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

கொதித்த பின், கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.