தேவையான பொருள்கள்.

பாசுமதி அரிசி – 2 கப்
வேகவைத்த பட்டாணி – அரை கப்
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
துருவிய சீஸ் – அரை கப்
நெய்யில் வறுத்த முந்திரி – 10
நறுக்கிய புதினா கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
பாசுமதி அரிசியுடன் சிறிதளவு உப்பு சேர்த்து உதிர் உதிராக samaylkurippu வடித்துக்கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து  எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் , பச்சை மிளகாய்  பட்டாணி  சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு உதிர் உதிராக வடித்த சாதம், துருவிய சீஸ், சிறிதளவு உப்பு சேர்த்து நறுக்கிய புதினா கொத்தமல்லி நெய்யில் வறுத்த முந்திரி தூவி  கிளறி இறக்கவும்.