சேலம் மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் தூய்மை பணிகளை ஆணையாளர் கிறிஸ்துராஜ் இன்று அதிகாலை நேரில் சென்று ஆய்வு செய்தார்.காலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த பணியில் எவ்வித தொய்வும் ஏற்படாமல் நகரத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று பணியாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும் தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்புடன் பணியில் ஈடுபட அவர்களுக்கு பாதுகாப்பு கவசங்களையும்,அறிவுரைகளையும் வழங்கினார்.ஆய்வின் போது மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.