சேலம் : பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது .மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலை உயர்வை நாளுக்குநாள் அதிகரித்து தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 100 ரூபாயை கடந்துள்ளது. இந்த விலை ஏற்றத்தை கண்டித்து தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிள் பேரணி நடைபெற்றது. சேலம் ஜங்சன் பகுதியில் தொடங்கிய இந்த பேரணி 5 ரோடு, 4ரோடு,மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை வழியாக பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே நிறைவு பெற்றது. இந்த பேரணியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு பேரணியில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டது அனைத்து மக்களின் கவனத்தை ஈர்த்தது.சைக்கிள் பேரணியானது காங்கிரஸ் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. பேரணியில் காங்கிரஸ் கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
