*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2051_*

*_மாசி 17_*

*_29.02.2020_*
*_சனிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

அந்நியர்களின் மூலம் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதால் புகழ் கிடைக்கும். இழந்த பொருட்களை மீட்பதற்கான முயற்சிகள் கைகூடும். மனதில் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். மாணவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அஸ்வினி : முன்னேற்றமான நாள்.

பரணி : ஆதரவு கிடைக்கும்.

கிருத்திகை : முயற்சிகள் கைகூடும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் போது கவனத்துடன் செயல்படவும் உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளால் புகழப்படுவீர்கள். சக ஊழியர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். பங்காளிகளிடம் அமைதி காக்கவும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

கிருத்திகை : வெற்றி கிடைக்கும்.

ரோகிணி : புகழப்படுவீர்கள்.

மிருகசீரிஷம் : அமைதி காக்கவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

மூத்த உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும். கடல் மார்க்கப் பயணங்களால் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். கால்நடைகளால் இலாபம் உண்டாகும். மனதில் ஏற்பட்ட கவலைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். சுயதொழில் புரிவோருக்கு எதிர்பார்த்த கடன் உதவிகளால் மேன்மையான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும்.

திருவாதிரை : இலாபம் உண்டாகும்.

புனர்பூசம் : மேன்மையான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

தொழில் சார்ந்த முயற்சிகளில் காரியசித்தி அடைவீர்கள். அரசு சார்ந்த உதவிகள் சிறப்பாக இருக்கும். தொழிலின் மூலம் பிரபலம் அடைவீர்கள். ஆன்மிக பணிகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான சூழல் உண்டாகும். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மிதமான நீலம்

புனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.

பூசம் : அறிமுகம் கிடைக்கும்.

ஆயில்யம் : உயர்வான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

தொழில் சார்ந்த பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். புதிய முயற்சிகளில் நிதானத்துடன் செயல்படவும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மகம் : அனுகூலமான நாள்.

பூரம் : நிதானம் வேண்டும்.

உத்திரம் : ஒற்றுமை அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

கொடுக்கல் – வாங்கலில் பொறுமை வேண்டும். சமூக சேவை புரிபவர்களுக்கு சாதகமற்ற சூழல் உண்டாகும். மூத்த சகோதரர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். பயணங்களில் கவனம் தேவை. நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும் சூழல் அமையலாம். பேச்சில் நிதானமும், பொறுமையும் தேவை.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

உத்திரம் : பொறுமை வேண்டும்.

அஸ்தம் : சாதகமற்ற நாள்.

சித்திரை : கலங்கம் ஏற்படலாம்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

தந்தையின் உடல்நலனில் அக்கறை தேவை. புனித யாத்திரை செல்வதற்கான பணிகளை மேற்கொள்வீா்கள். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

சித்திரை : அனுசரித்து நடக்கவும்.

சுவாதி : எதிர்ப்புகள் நீங்கும்.

விசாகம் : அறிமுகம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

போட்டிகளில் வெற்றி அடைவீர்கள். நண்பர்களிடம் அமைதிப்போக்கை கடைபிடிக்கவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் போது கவனமாக இருக்கவும். கூட்டாளிகளிடம் பொறுமையை கடைபிடிக்கவும். எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும். எதிர்கால பலன் கருதி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : வெற்றி கிடைக்கும்.

அனுஷம் : பொறுமை வேண்டும்.

கேட்டை : தனவரவு மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கப்பெற்று தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். மனைவியின் மூலம் சுபவிரயம் உண்டாகும். நெருங்கிய உறவினர்களிடம் வீண்விவாதங்களை தவிர்க்கவும். உல்லாச கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். பிள்ளைகளின் மூலம் பெருமைப்படக் கூடிய செய்திகள் வந்தடையும். கலைஞர்களுக்கு பெருமை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மூலம் : அபிவிருத்தியான நாள்.

பூராடம் : விவாதங்களை தவிர்க்கவும்.

உத்திராடம் : மகிழ்ச்சியான நாள

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்களுடன் பயணம் சென்று விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனதில் புதிய வகையான எண்ணங்கள் தோன்றும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

திருவோணம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அவிட்டம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

பூமி சம்பந்தமான சுபவிரயங்கள் ஏற்படும். ஆடை ஆபரணச்சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் மூலம் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். தாயின் ஆதரவால் மனமகிழ்ச்சி ஏற்படும். புண்ணிய செயல்களுக்கு நன்கொடைகள் அளித்து மகிழ்வீர்கள். ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். பெரியோர்களின் ஆதரவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : விரயங்கள் ஏற்படும்.

சதயம் : மனமகிழ்ச்சி உண்டாகும்.

பூரட்டாதி : ஆதரவுகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

சொத்துச்சேர்க்கை ஏற்படும். வாகன விருத்தி உண்டாகும். இளைய சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டப்படுவீர்கள். விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

பூரட்டாதி : விருத்தி உண்டாகும்.

உத்திரட்டாதி : பாராட்டப்படுவீர்கள்.

ரேவதி : திறமைகள் வெளிப்படும்.

•┈┈•❀??????❀•┈┈•