*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_சித்திரை 14_*
*_27.04.2019_*
*_சனிக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
குடும்ப பொருளாதாரத்தில் மேன்மை உண்டாகும். நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் கிடைக்கும். வாக்குறுதிகளால் கீர்த்தி உண்டாகும். துரிதமான செயல்பாடுகளால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். கல்வியில் முன்னேற்றமான சூழல் அமையும். முயற்சிக்கேற்ற பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அசுவினி : பொருளாதாரம் மேம்படும்.
பரணி : கீர்த்தி உண்டாகும்.
கிருத்திகை : பாராட்டப்படுவீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
சகோதரர்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். உயர் அதிகாரிகளின் உதவியால் தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணியில் மேன்மை அடைவதற்கான தகுந்த ஆலோசனைகள் கிடைக்கும். இறைவழிபாடு செய்வதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நன்மை தரும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
கிருத்திகை : ஆதாயமான நாள்.
ரோகிணி : ஆலோசனைகள் கிடைக்கும்.
மிருகசீரிடம் : நன்மைகள் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும், அலைச்சல்களும் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். முக்கிய முடிவுகளை கலந்து ஆலோசித்து எடுக்கவும். புதிய நபர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
திருவாதிரை : வாதங்களை தவிர்க்கவும்.
புனர்பூசம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
தொழிலில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த தனவரவுகளால் மேன்மை உண்டாகும். தடைபட்ட செயல்கள் கைக்கூடுவதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் எதிர்பார்த்த மாற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
புனர்பூசம் : முன்னேற்றமான நாள்.
பூசம் : மகிழ்ச்சியான சூழல் அமையும்.
ஆயில்யம் : வாய்ப்புகள் அமையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நபர்களின் ஆதரவுகளால் மாற்றமான சூழல் உண்டாகும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : சாதகமான நாள்.
பூரம் : மாற்றமான சூழல் அமையும்.
உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
வியாபாரம் தொடர்பான எண்ணங்களும் அதற்கான முயற்சிகளும் மேம்படும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய வாய்ப்புகளால் சாதகமான சூழல் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். நண்பர்களின் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : முயற்சிகள் மேம்படும்.
அஸ்தம் : வெற்றி உண்டாகும்.
சித்திரை : எதிர்ப்புகள் அடங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
எதிர்பார்த்த பணவரவு சாதகமாக அமையும். உத்தியோகஸ்தரர்களுக்கு இடமாற்றம் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் இருந்த காலதாமதம் அகலும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். உயர் பதவியில் இருப்பவர்கள் சக பணியாளர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். உத்தியோகம் தொடர்பான புதிய முயற்சிகள் எண்ணிய பலனை அளிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
சித்திரை : உதவிகள் கிடைக்கும்.
சுவாதி : இடமாற்றம் உண்டாகும்.
விசாகம் : முயற்சிகள் ஈடேறும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சுப விரயங்கள் உண்டாகும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் துறையில் முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். நிர்வாகம் தொடர்பான முடிவுகளில் சற்று நிதானத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : சுப விரயம் உண்டாகும்.
அனுஷம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
கேட்டை : நிதானத்துடன் செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
எந்தவொரு செயலையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத செலவுகள் மூலம் வீண் அலைச்சல்கள் உண்டாகலாம். திட்டமிட்ட பணிகளை செயல்படுத்துவதில் சிறிது காலதாமதம் உண்டாகும். குடும்பத்தில் இருக்கும் குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். உடன்பணிபுரிபவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : தைரியம் அதிகரிக்கும்.
பூராடம் : அனுசரித்துச் செல்லவும்.
உத்திராடம் : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
மனதிலிருந்த கவலைகள் நீங்குவதற்கான சூழல் உண்டாகும். சுப விரயம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பணிகளில் இருந்து வந்த தடை, தாமதங்கள் குறையும். எடுத்துச்செல்லும் பொருட்களில் கவனம் வேண்டும். தொழில் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
உத்திராடம் : கவலைகள் நீங்கும்.
திருவோணம் : ஆரோக்கியம் மேம்படும்.
அவிட்டம் : பயணங்கள் சாதகமாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். தொழில் சம்பந்தமான முயற்சிகள் சாதகமான பலனை கொடுக்கும். மற்றவர்களிடம் பேசும்போது கவனத்துடன் பேசவும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரிவினை நீங்கி ஒற்றுமை உண்டாகும். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
சதயம் : பேச்சில் கவனம் தேவை.
பூரட்டாதி : சிந்தனைகள் மேலோங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
உறவினர்களால் சாதகமான பலன்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் நீங்கி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பாராத செய்திகளால் மாற்றமான சூழல் உண்டாகும். எதையும் சமாளிக்கும் திறமை மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
பூரட்டாதி : சாதகமான நாள்.
உத்திரட்டாதி : உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.
ரேவதி : திறமைகள் மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
