*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_சித்திரை 13_*

*_26.04.2019_*
*_வெள்ளிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

உடல் அழகு மற்றும் ஆரோக்கியம் சம்பந்தமான புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். சிந்தனையின் போக்கில் முன்னேற்றம் உண்டாகும். மனச்சோர்வுகளால் வேலையில் கவனமின்றி இருப்பதால் வசைச் சொற்களுக்கு ஆளாக நேரிடும். உங்களின் இலக்கை செயல்படுத்துவதற்கான ஆதரவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : ஆரோக்கியம் மேம்படும்.
பரணி : கவனம் வேண்டும்.
கிருத்திகை : ஆதரவுகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

உறவினர்களால் சாதகமான சூழல் அமையும். புதிய முயற்சிகளில் எண்ணிய எண்ணம் ஈடேறும். விவாதங்களில் சாதகமான சூழல் அமையும். பொருளாதார மேன்மைக்கான செயல்பாடுகள் எண்ணிய பலன்களை தரும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான நாள். ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

கிருத்திகை : உறவு மேம்படும்.
ரோகிணி : இலாபம் உண்டாகும்.
மிருகசீரிடம் : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

செய்யும் வேலைகளில் தடங்கல்கள் தோன்றி மறையும். வியாபார ரீதியான கொடுக்கல், வாங்கலில் நிதானம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வாகனங்களில் செல்லும்போது கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மிருகசீரிடம் : விரயம் உண்டாகும்.
திருவாதிரை : நிதானம் வேண்டும்.
புனர்பூசம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

அரசாங்கத்திடமிருந்து அனுகூலமான செய்திகள் கிடைக்கும். நிறுவனங்களில் சவாலான பணிகளில் ஈடுபட்டு அனைவராலும் புகழப்படுவீர்கள். ஆபரணச் சேர்க்கைக்கான செயல்திட்டத்தை வகுப்பீர்கள். கடிதத்தின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வேலைக்கான முயற்சிகள் ஈடேறும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : சாதகமான சூழல் அமையும்.
பூசம் : ஆதரவு கிடைக்கும்.
ஆயில்யம் : முயற்சிகள் ஈடேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணியில் உள்ளவர்களுக்கு வீண் கவலைகள் தோன்றும். செயல்பாடுகளில் சிறிது கவனம் வேண்டும். தொழில் சம்பந்தமான இடமாற்றம் உண்டாகும். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

மகம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
பூரம் : அமைதி காக்கவும்.
உத்திரம் : அனுசரித்துச் செல்லவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

பிள்ளைகளின் மூலம் சுப விரயம் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் நன்மை உண்டாகும். தொழிலில் பொறுப்புகள் அதிகரிக்கும். செய்யும் பணியில் நிதானம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் அமைதியாக நடந்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்

உத்திரம் : சுப விரயம் உண்டாகும்.
அஸ்தம் : நிதானம் வேண்டும்.
சித்திரை : அனுசரித்துச் செலலவும்

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

கணவன், மனைவிக்கிடையே உள்ள வாக்குவாதங்கள் குறைந்து அன்பு அதிகரிக்கும். மனக்கவலைகள் குறைந்து புத்துணர்ச்சி பெறுவீர்கள். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் மேன்மையான சூழல் அமையும். தலைமைப் பொறுப்பிற்கான முயற்சிகள் ஈடேறும். கடல் வழி பயணங்களால் ஆதாயம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

சித்திரை : அன்பு அதிகரிக்கும்.
சுவாதி : புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.
விசாகம் : சுப முயற்சிகள் கைக்கூடும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

அரசு அதிகாரிகளின் மூலம் அனுகூலமான சூழ்நிலை அமையும். தைரியமான செயல்பாடுகளால் திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். பூமி விருத்திக்கான பணிகளை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

விசாகம் : காரியசித்தி உண்டாகும்.
அனுஷம் : தன்னம்பிக்கை மேம்படும்.
கேட்டை : பூமி விருத்தி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

வாக்குவன்மையால் பெருமை அடைவீர்கள். வெளியூர் பயணங்களால் நன்மைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் நீங்கும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான காரியங்களில் தந்தையின் ஆதரவு கிடைக்கும். பணியில் உள்ளவர்களுக்கு மதிப்பு உயரும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்

மூலம் : பெருமை அடைவீர்கள்.
பூராடம் : இன்னல்கள் நீங்கும்.
உத்திராடம் : மதிப்பு உயரும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

தாயின் ஆதரவினால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். புனித யாத்திரை மேற்கொள்வீர்கள். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். குடும்ப பொருளாதாரத்தில் மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : இலாபம் கிடைக்கும்.
திருவோணம் : ஆசிகள் கிடைக்கும்.
அவிட்டம் : அனுகூலமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

குடும்ப உறுப்பினர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். நிர்வாகத்தில் சாதகமற்ற சூழல் ஏற்படும். மனைவியின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். வெளியூர் பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அவிட்டம் : விவேகம் வேண்டும்.
சதயம் : ஆசைகள் ஈடேறும்.
பூரட்டாதி : புதிய அனுபவம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

நிலுவையில் இருந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருப்பது நன்மை அளிக்கும். புதுவிதமான எண்ணங்களால் வீண் அலைச்சல்கள் மற்றும் குழப்பங்கள் நேரிடலாம். நிதானமான செயல்பாடுகளால் செல்வாக்கு உயரும். மூத்த உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

பூரட்டாதி : காரியம் ஈடேறும்
உத்திரட்டாதி : நிதானம் வேண்டும்
ரேவதி : செல்வாக்கு உயரும்.

•┈┈•❀??????❀•┈┈•