*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_வைகாசி 10_*

*24.05.2019*
*_வெள்ளிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

குறுகிய தூர பயணங்களால் மனமகிழ்ச்சி ஏற்படும். நிர்வாகத் துறையில் உள்ளவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். நீர்வழி வியாபாரங்களால் சுமாரான தனவரவு உண்டாகும். புதிய முயற்சியில் சாதகமான நிலை உண்டாகும். விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். எதிர்வாதத்தால் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : மகிழ்ச்சியான நாள்.
பரணி : தனவரவு கிடைக்கும்.
கிருத்திகை : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

இளைய சகோதரர்கள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டாகும். திடீர் யோகத்தால் தனவரவு கிடைக்கும். சுயதொழிலில் மேன்மையான சூழல் ஏற்படும். புத்துணர்ச்சி பெறுவீர்கள். புதிய வாகனங்களை வாங்குவதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

கிருத்திகை : அனுகூலமான நாள்.
ரோகிணி : புத்துணர்ச்சியான நாள்.
மிருகசீரிடம் : தனவரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

பணிபுரியும் இடங்களில் கவனமாக இருக்க வேண்டும். பிறரிடம் வேலைகளை கொடுக்காமல் நீங்களே முடிப்பது சிறப்பு. வீண் அலைச்சல்களால் உடல்சோர்வு உண்டாகும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருப்பது நன்மை அளிக்கும். கொடுக்கல், வாங்கலில் எச்சரிக்கை வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மிருகசீரிடம் : பணிகளில் கவனம் தேவை.
திருவாதிரை : அலைச்சல்கள் உண்டாகும்.
புனர்பூசம் : எச்சரிக்கையுடன் செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

நண்பர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் இலாபம் உண்டாகும். மனைவியின் ஆதரவால் சேமிப்பு உயரும். கூட்டாளிகளால் சுப விரயம் ஏற்பட்டு தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். கெளரவ பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

புனர்பூசம் : இன்பமான நாள்.
பூசம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
ஆயில்யம் : உயர்வான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

புதிய மனை வாங்குவதற்கான எண்ணங்கள் மேலோங்கும். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். சக ஊழியர்களிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். பூர்வீகச் சொத்துகளால் தனவிரயம் உண்டாகும். தொழில் வகை அலைச்சல்கள் உண்டாகும். எதிர்பாராத பயணங்கள் கைக்கூடும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : எண்ணங்கள் மேலோங்கும்.
பூரம் : இலாபம் கிடைக்கும்.
உத்திரம் : அலைச்சல்கள் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

செய்யும் தொழிலால் கீர்த்தி உண்டாகும். புதிய யுக்திகளை கையாண்டு தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். தந்தை மற்றும் மகனுக்குமான உறவு மேம்படும். தலைமை பதவி கிடைப்பதற்கு சாதகமான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : பாராட்டப்படுவீர்கள்.
அஸ்தம் : உறவு மேம்படும்.
சித்திரை : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

உத்தியோகத்தில் திறமைக்கேற்ப பதவி உயர்வும், வழிகாட்டுதலும் கிடைக்கும். உறவினர்களிடமிருந்து சாதகமான செய்திகள் கிடைக்கும். கால்நடைகளால் இலாபம் உண்டாகும். வாகனப் பயணங்களால் மாற்றம் உண்டாகும். எதிர்பாராத செய்திகளால் விரயங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

சித்திரை : உயர்வு உண்டாகும்.
சுவாதி : சாதகமான செய்திகள் கிடைக்கும்.
விசாகம் : மாற்றம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

சகோதரர்களால் சுபச் செய்திகள் கிடைக்கும். புத்திரர்களின் ஆதரவால் சேமிப்பு உயரும். வெளிநாட்டு பயணங்களால் அனுகூலமான இலாபம் உண்டாகும். ஆபரணச்சேர்க்கை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் எண்ணிய எண்ணம் ஈடேறும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
அனுஷம் : ஆதரவு கிடைக்கும்.
கேட்டை : எண்ணங்கள் ஈடேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

குடும்ப உறுப்பினர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். பொருட்களை கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும். பொதுக்கூட்டப் பேச்சில் ஈடுபடுபவர்கள் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் சாதகமற்ற சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மூலம் : விவாதங்களை தவிர்க்கவும்.
பூராடம் : பேச்சில் நிதானம் வேண்டும்.
உத்திராடம் : கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

நண்பர்களின் உதவியால் பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்படும். புதிய தொழில் சார்ந்த முயற்சிகள் எண்ணிய வெற்றியை தரும். பொருட்சேர்க்கையால் மகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே அனுகூலமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

உத்திராடம் : அனுகூலமான நாள்.
திருவோணம் : மேன்மையான நாள்.
அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

கடல் மார்க்க செய்திகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வாக்குவன்மையால் அனைவரையும் கவர்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான செயல்கள் நடைபெறும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.
சதயம் : காரியசித்தி உண்டாகும்.
பூரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் சாதகமான சூழல் உண்டாகும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். மாணவர்களின் அறிவுக்கூா்மை வெளிப்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

பூரட்டாதி : உறவு மேம்படும்.
உத்திரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
ரேவதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•