*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_வைகாசி 09_*

*23.05.2019*
*_வியாழக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

பூர்வீக சொத்துகளால் நன்மை உண்டாகும். திருமணப் பேச்சு வார்த்தைகள் சாதகமாக அமையும். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அசுவினி : நன்மை உண்டாகும்.
பரணி : திறமைகள் வெளிப்படும்.
கிருத்திகை : ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

உறவினர்களால் சாதகமான சூழல் உண்டாகும். பெற்றோர்களின் ஆதரவுகள் கிடைக்கும். மனதில் எண்ணிய செயலை செயல்படுத்துவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய தொழில் சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : இலாபம் கிடைக்கும்.
ரோகிணி : ஆலோசனைகள் கிடைக்கும்.
மிருகசீரிடம்- எண்ணங்கள் ஈடேறும்

*☸மிதுனம்:-*

கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் தோன்றி மறையும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை தவிர்க்கவும். கொடுக்கல் மற்றும் வாங்கலில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் அலைச்சல்கள் ஏற்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். முன்கோபத்தை தவிர்த்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

மிருகசீரிடம் : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
திருவாதிரை : புரிதல் உண்டாகும்.
புனர்பூசம் : கனிவு வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி புரிதல் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளியூரிலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கும். புனித யாத்திரை சென்று வருவதன் மூலம் மனம் மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகளின் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பூசம் : புரிதல் உண்டாகும்.
பூசம் : நன்மை உண்டாகும்.
ஆயில்யம் : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பாராத இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான புதிய யுக்திகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும். மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : குழப்பங்கள் நீங்கும்.
பூரம் : அனுசரித்துச் செல்லவும்.
உத்திரம் : சிந்தனை மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் பாராட்டுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திரம் : சாமர்த்தியம் பிறக்கும்.
அஸ்தம் : சுபிட்சமான நாள்.
சித்திரை : பாராட்டுகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். எதிர்காலம் சார்ந்த பணிகளை மேற்கொள்வீர்கள். செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு புதிய வாய்ப்புகள் அமையும். மனதில் பழைய நினைவுகள் அவ்வப்போது தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

சித்திரை : முயற்சிகள் ஈடேறும்.
சுவாதி : எண்ணங்கள் மேலோங்கும்.
விசாகம் : வாய்ப்புகள் அமையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

சுயதொழில் சார்ந்த பயணங்களை மேற்கொள்வீர்கள். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் கவனத்துடன் செயல்படவும். விலையுயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். வியாபாரத்தில் முயற்சிக்கேற்ற இலாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

விசாகம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
அனுஷம் : கவனம் வேண்டும்.
கேட்டை : அனுசரித்துச் செல்லவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்ப நபர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மனதிற்கு பிடித்தவர்களை எண்ணி கவலைப்படுவீர்கள். தொழில் சார்ந்த வட்டாரங்களில் உங்களின் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் சூழலுக்கு தகுந்தாற்போல் செயல்படுவது நன்மை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மூலம் : விவாதங்களை தவிர்க்கவும்.
பூராடம் : விருப்பங்கள் நிறைவேறும்.
உத்திராடம் : செல்வாக்கு உயரும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உயர் அதிகாரிகளிடம் விவேகத்துடன் செயல்படவும். வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் நீங்கள் செய்யும் சிறு மாற்றத்தின் மூலம் சாதகமான சூழல் அமையும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் மற்றும் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவோணம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
அவிட்டம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

உறவினர்களிடமிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விவசாயம் சார்ந்த பணிகளால் ஆதாயம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். பொருளாதார சிக்கல்களை குறைப்பதற்கான முயற்சிகள் மேம்படும். தாயாரின் உடல்நலத்தில் இருந்த இன்னல்கள் குறைந்து முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம் : அனுகூலமான நாள்.
சதயம் : அறிமுகம் கிடைக்கும்.
பூரட்டாதி : முயற்சிகள் மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். மனதிற்கு இதமான சுபச் செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் அமையும். சிறு தூர பயணங்களின் மூலம் மாற்றம் பிறக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : காரியசித்தி உண்டாகும்.
உத்திரட்டாதி : முன்னேற்றமான நாள்.
ரேவதி : மாற்றம் பிறக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•