*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_ஆனி 08_*

*23.06.2019*
*_ஞாயிற்றுக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

உடன்பிறந்தவர்களால் சுபவிரயம் உண்டாகும். கடிதத்தின் மூலம் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். துணிச்சலுடன் புதிய செயல் திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : சுபவிரயம் உண்டாகும்.

பரணி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

மனைவியிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். விவாதங்களை தவிர்ப்பது நன்மையை தரும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். கூட்டுத்தொழிலில் உள்ளவர்களுக்கு பொருளாதார மேன்மை உண்டாகும். புதிய நபர்களின் ஆதரவால் தனவரவு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்

கிருத்திகை : நன்மை உண்டாகும்.

ரோகிணி : நிதானத்துடன் இருக்கவும்.

மிருகசீரிடம் : தனவரவு உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

இறை வழிபாட்டால் மனதில் உள்ள துன்பங்கள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். உறவினர்களிடம் அமைதி காக்கவும். செய்யும் பணிகளில் முழு ஈடுபாட்டுடன் செய்யவும். வாக்குவாதத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மிருகசீரிடம் : புத்துணர்ச்சி அடைவீர்கள்.

திருவாதிரை : அமைதி காக்கவும்.

புனர்பூசம் : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசும்போது கவனத்துடன் பேசவும். எதிலும் நிதானம் வேண்டும். தியானம் போன்ற மன அமைதிக்கான எண்ணங்கள் உருவாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து கிடைக்க வேண்டிய கடன் உதவிகள் காலதாமதமாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பூசம் : கவனம் வேண்டும்.

பூசம் : உதவிகள் காலதாமதமாகும்.

ஆயில்யம் : முடிவுகளில் நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

உன்னத செயல்களின் மூலம் நற்பெயர்கள் வந்தடையும். கடல் மார்க்க பயணங்களால் இலாபகரமான செய்திகள் வந்தடையும். அறிந்த கலைகளால் தனலாபம் ஏற்பட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். வாரிசுகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். சுபச் செய்திகள் வந்து சேரும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : நற்பெயர் உண்டாகும்.

பூரம் : தனலாபம் அடைவீர்கள்.

உத்திரம் : சுபிட்சமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வாக்குவன்மையால் பொருளாதார நிலை உயரும். அணிகலன்களின் சேர்க்கை உண்டாகும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான செய்திகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான முக்கியமான பிரதிநிதிகளின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : முயற்சிகள் ஈடேறும்.

அஸ்தம் : பொருளாதாரம் உயரும்.

சித்திரை : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். தொழில் சார்ந்த அலைச்சல்கள் உண்டாகும். வாரிசுகளால் பெருமைகள் வந்து சேரும். பூர்வீக சொத்துக்களால் இலாபம் அடைவீர்கள். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேலோங்கும். உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

சித்திரை : பாராட்டுகள் கிடைக்கும்.

சுவாதி : நினைவாற்றல் மேலோங்கும்.

விசாகம் : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

பொருட்சேர்க்கை உண்டாகும். மனக்குழப்பத்தால் வேலையில் மந்தத்தன்மை உண்டாகும். பணியில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகளில் காலதாமதம் உண்டாகும். போட்டிகளில் சாதகமான சூழல் அமையும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

விசாகம் : மந்தத்தன்மை உண்டாகும்.

அனுஷம் : பணிச்சுமை அதிகரிக்கும்.

கேட்டை : ஆதரவு கிடைக்கும்

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள். வாக்குறுதிகளால் கீர்த்தி உண்டாகும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். வெளிநாட்டு பயணங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு வேலைப்பளுவினால் மேன்மையான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மூலம் : கீர்த்தி உண்டாகும்.

பூராடம் : எண்ணங்கள் ஈடேறும்.

உத்திராடம் : உயர்வு உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

பங்காளிகளிடம் நிதானமாக இருக்கவும். புதுவிதமான எண்ணங்களால் குழப்பம் உண்டாகும். வாகனங்களை கொண்டு தொழில் புரிபவர்களுக்கு எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே உள்ள வேற்றுமை நீங்கி ஒற்றுமை மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திராடம் : நிதானம் வேண்டும்.

திருவோணம் : குழப்பம் உண்டாகும்.

அவிட்டம் : ஒற்றுமை மேலோங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

ஆன்மீக வழிபாட்டில் மனம் ஈடுபடும். தாயின் உடல் நலத்தில் அக்கறை வேண்டும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். மனைகளில் வீடு கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கல்வி சம்பந்தப்பட்ட கலந்துரையாடலில் கலந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

அவிட்டம் : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

சதயம் : அனுசரித்து செல்லவும்.

பூரட்டாதி : முயற்சிகள் ஈடேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

கால்நடைகளால் இலாபம் அடைவீர்கள். உறவினர்களின் வீட்டு விருந்தில் பங்கேற்பீர்கள். வாகனங்களால் இலாபம் உண்டாகும். தாயின் ஆதரவால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். வாக்குவன்மையால் பொருட்சேர்க்கை உண்டாகும். புதிய நபர்களின் வரவால் சுப விரயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்

பூரட்டாதி : இலாபம் உண்டாகும்.

உத்திரட்டாதி : மகிழ்ச்சி அடைவீர்கள்.

ரேவதி : சுப விரயம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•