*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_ஆடி 03_*
*19.07.2019*
*_வெள்ளிக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
தர்க்க விவாதங்களால் கீர்த்தி அடைவீர்கள். நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளின் மூலம் சாதகமான சூழல் அமையும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பாலின மக்களிடம் கவனம் வேண்டும். மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அசுவினி : கீர்த்தி உண்டாகும்.
பரணி : வாய்ப்புகள் அமையும்.
கிருத்திகை : புத்துணர்ச்சி அடைவீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். திருமணப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். கூட்டு வணிகத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
கிருத்திகை : நட்பு அதிகரிக்கும்.
ரோகிணி : எண்ணங்கள் ஈடேறும்.
மிருகசீரிடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
எதிர்பார்த்த உதவிகளால் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். மூத்த சகோதரர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். இணையதளம் சம்பந்தமான பணியில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மிருகசீரிடம் : முதலீடுகள் அதிகரிக்கும்.
திருவாதிரை : மகிழ்ச்சி உண்டாகும்.
புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
உத்தியோகஸ்தரர்கள் சக பணியாட்களை அனுசரித்து செல்லவும். தொழில் சார்ந்த அலைச்சல்கள் அதிகரிக்கும். மனதில் தோன்றும் பலவிதமான எண்ணங்களால் குழப்பமான சூழல் உண்டாகும். குடும்ப பெரியோர்களிடம் சற்று அனுசரித்து செல்லவும். உடைமைகளில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.
பூசம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
ஆயில்யம் : கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
புதுவிதமான எண்ணங்கள் மேலோங்கும். வாகனப் பயணங்களால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். இறை வழிபாட்டில் மனம் ஈடுபடும். கணவன், மனைவிக்கிடையே உறவுகள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : எண்ணங்கள் மேலோங்கும்.
பூரம் : முன்னேற்றமான நாள்.
உத்திரம் : உறவுகள் மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
வேலை தேடுபவர்களுக்கு முயற்சிக்கேற்ப நற்செய்திகள் கிடைக்கும். வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும். பணி சம்பந்தமாக புதிய இடங்களுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள். உயர் அதிகாரிகளிடம் சற்று நிதானத்துடன் நடந்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
உத்திரம் : முயற்சிகள் கைகூடும்.
அஸ்தம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
சித்திரை : நிதானம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
மாணவர்கள் கல்வி பயிலும் விதத்தில் மாற்றம் உண்டாகும். நுட்பங்களை கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும். செய்தொழில் புரிபவர்கள் கவனத்துடன் இருக்கவும். தொழில் சார்ந்த அலைச்சல்களால் மனச்சோர்வு உண்டாகும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
சித்திரை : மாற்றம் உண்டாகும்.
சுவாதி : கவனம் வேண்டும்.
விசாகம் : எண்ணங்கள் மேலோங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
தாயாரின் ஆதரவு கிடைக்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் கவனத்துடன் படிக்கவும். நண்பர்களின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் அமையும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
விசாகம் : கவனம் வேண்டும்.
அனுஷம் : இன்பமான நாள்.
கேட்டை : செல்வாக்கு மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
புதிய முயற்சிகளால் சுப விரயம் உண்டாகும். விளையாட்டு வீரர்கள் போட்டியில் கவனத்துடன் ஈடுபடவும். கடல் மார்க்க பயணங்களால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். தலைமை பதவியில் உள்ளவர்களிடம் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : சுப விரயம் உண்டாகும்.
பூராடம் : காரியங்கள் நிறைவேறும்.
உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
குடும்ப உறுப்பினர்களால் சேமிப்பு அதிகரிக்கும். தொழிலில் புதிய வாடிக்கையாளர்களின் மூலம் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். தலைமை பதவியில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திராடம் : சேமிப்பு அதிகரிக்கும்.
திருவோணம் : இலாபம் கிடைக்கும்.
அவிட்டம் : ஆதரவு உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
வழக்குகளில் எதிர்பார்த்த சாதகமான முடிவுகள் கிடைக்கும். வாக்குவன்மையால் கீர்த்தி உண்டாகும். கருத்துக்களை பரிமாறும்போது நிதானம் வேண்டும். எண்ணிய காரியங்களில் சில தடங்கல்கள் வந்து போகும். வாகன பராமரிப்பு செலவுகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆலிவ் பச்சை
அவிட்டம் : கீர்த்தி உண்டாகும்.
சதயம் : நிதானம் வேண்டும்.
பூரட்டாதி : செலவுகள் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
நீண்ட நாட்களாக எண்ணிய திட்டங்களை தைரியத்துடன் நடைமுறை படுத்துவீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கான நுட்பமான பணிகளை மேற்கொள்வீர்கள். வாரிசுகளால் மகிழ்ச்சி உண்டாகும். எடுத்த செயலை பல்வேறு தடைகளை கடந்து செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
பூரட்டாதி : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : நுட்பத்திறன் மேம்படும்.
ரேவதி : உதவிகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
