*_???முத்தமிழ்???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_ஆடி 02_*
*_18.07.2018_*
*_புதன்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்: -*
புதிய வேலை! சுபச் செய்திகள் வந்தடையும். வெளியூர் பயணங்களால் மத்தியமான பலன் கிடைக்கும். எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். மேலதிகாரிகளால் சாதகமான சூழல் அமையும். தாயிடம் அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
அசுவினி : சுபமான நாள்.
பரணி : நிதானம் வேண்டும்.
கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம் :-*
துணிவுடன் புதிய ஆராய்ச்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தின் ஆதரவால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழிலில் மேன்மையான சூழல் அமையும். வாக்குவன்மையால் பொருளாதார நிலை உயரும். ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
கிருத்திகை : ஆராய்ச்சியில் ஈடுபடுவீர்கள்.
ரோகிணி : வெற்றி கிடைக்கும்.
மிருகசீரிடம் : வாய்ப்புகள் அமையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம் :-*
ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் புத்திக்கூர்மை வெளிப்படும். வாகனப் பயணங்களால் இலாபம் உண்டாகும். அந்நியர்களால் எதிர்பாராத தனவரவு கிடைக்கும். மனைவியிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். ஆலய வழிபாட்டை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
மிருகசீரிடம் : முன்னேற்றம் உண்டாகும்.
திருவாதிரை : புத்திக்கூர்மை வெளிப்படும்.
புனர்பூசம் : இலாபம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம் :-*
கடிதத்தின் மூலம் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். விளையாட்டு வீரர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்கவும். தொழிலில் முன்னேற்றம் அடைவதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். செய்தொழிலில் மேன்மை உண்டாகும். இளைய சகோதரர்களினால் சுப விரயம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
புனர்பூசம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
பூசம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
ஆயில்யம் : சுப விரயம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம் :-*
பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். பொருட்சேர்க்கை உண்டாகும். தூர தேசப் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். செய்யும் பணிகளை முழு ஈடுபாட்டுடன் செய்யவும். உடன்பணிபுரியும் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். அந்நியர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : பாராட்டுகள் கிடைக்கும்.
பூரம் : மகிழ்ச்சி உண்டாகும்.
உத்திரம் : பேச்சில் கவனம் தேவை.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி :-*
மனைகளால் இலாபம் அதிகரிக்கும். கலை சார்ந்த அறிவுகளால் பாராட்டப்படுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கமான விஷயங்களை பயில்வீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். நிலுவையில் இருந்த பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். திருமண வரன்கள் சாதகமாக அமையும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : எண்ணிய காரியம் ஈடேறும்.
அஸ்தம் : அறிவு மேம்படும்.
சித்திரை : கலகலப்பான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம் :-*
எதிர்பார்த்த உதவிகளால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் செயல்படவும். விவாதங்களினால் கீர்த்தி உண்டாகும். வாகனங்களால் சில விரயங்கள் ஏற்படும். மற்றவர்களின் பணிகளையும் சேர்த்துச் செய்ய வேண்டிய சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
சித்திரை : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
சுவாதி : சிந்தனைகள் மேம்படும்.
விசாகம் : கீர்த்தி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம் :-*
நிர்வாகத்தில் உள்ள குறைகளை களைவீர்கள். புதுவித எண்ணங்கள் தோன்றும். பெரியோர்களின் ஆலோசனை கிடைக்கும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். மூத்த உடன்பிறப்புகள் சாதகமாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த தனவரவால் சேமிப்பு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
விசாகம் : எதிர்ப்புகள் நீங்கும்.
அனுஷம் : மாற்றமான நாள்.
கேட்டை : சேமிப்பு அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு :-*
தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் அனுகூலமான சூழல் அமையும். மனதில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். நட்பு வட்டம் விரிவடையும். கோபத்தை விடுத்து சிந்தித்து செயல்படவும். உத்தியோகஸ்தரர்கள் உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் பழகவும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மூலம் : அனுகூலமான நாள்.
பூராடம் : நட்பு வட்டம் விரிவடையும்.
உத்திராடம் : சிந்தித்து செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம் :-*
பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். பிள்ளைகளின் உடல்நலனில் கவனம் வேண்டும். புதுவிதமான அணுகுமுறையால் மாற்றம் உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு மதிப்பு கூடும். தம்பதிகளுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
உத்திராடம் : பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும்.
திருவோணம் : மாற்றமான நாள்.
அவிட்டம் : மதிப்பு உயரும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம் :-*
செய்யும் பணியில் பிறரின் இடர்பாடுகளால் காலதாமதம் ஏற்படும். குடும்ப பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். பிறரின் குறைகளை சுட்டிக்காட்ட வேண்டாம். நெருங்கிய நண்பர்களிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : காலதாமதம் உண்டாகும்.
சதயம் : ஆதரவு கிடைக்கும்.
பூரட்டாதி : மனக்கசப்புகள் குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம் :-*
குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உயர் பதவியில் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பணிபுரியும் இடங்களில் உங்களின் பேச்சுக்கு மதிப்பு கூடும். திட்டமிட்ட பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். செய்தொழிலில் உங்களின் திறமைகள் வெளிப்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : ஒற்றுமை அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : மதிப்பு கூடும்.
ரேவதி : திறமைகள் வெளிப்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
