*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_ஆடி 27_*

*12.08.2019*
*_திங்கட்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய லட்சியத்தை அடைவதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். தூர தேசத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வாகனப் பயணங்களால் இலாபம் உண்டாகும். கல்லூரி படிப்பிற்கான சுப விரயங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

அசுவினி : ஆதரவு கிடைக்கும்.

பரணி : கவலைகள் குறையும்.

கிருத்திகை : சுப விரயங்கள் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். திருமண முயற்சிகளில் காலதாமதம் உண்டாகும். எதிர்பார்த்த தனவரவுகளில் இழுபறியான நிலை உண்டாகும். செய்யும் செயல்களில் நிதானம் வேண்டும். பணியில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்க காலதாமதமாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

கிருத்திகை : விவாதத்தை தவிர்க்கவும்.

ரோகிணி : இழுபறியான நாள்.

மிருகசீரிடம் : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

திடீர் யோகத்தால் எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். புதிய நபர்களிடம் தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்க்கவும். நண்பர்களுடன் வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் மேன்மையான சூழல் உண்டாகும். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மிருகசீரிடம் : அதிர்ஷ்டம் உண்டாகும்.

திருவாதிரை : வாய்ப்புகள் அமையும்.

புனர்பூசம் : மேன்மையான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

குடும்ப உறுப்பினர்களிடம் அமைதி காக்கவும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வாக்குறுதிகளால் கீர்த்தி உண்டாகும். நீண்ட நாட்களாக தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.

பூசம் : காரியசித்தி உண்டாகும்.

ஆயில்யம் : அன்பு அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

ஞானம் சார்ந்த உபதேசங்கள் கிடைக்கும். பிள்ளைகளின் மூலம் சுப விரயங்கள் உண்டாகும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தைரியத்துடன் புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். செயல்பாடுகளில் துரிதம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மகம் : உபதேசங்கள் கிடைக்கும்.

பூரம் : சுப விரயங்கள் உண்டாகும்.

உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

மனக்கவலைகள் குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பொருட்சேர்க்கைக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தூர தேச பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு இலாபம் மற்றும் மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் பொருளாதார மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திரம் : கவலைகள் குறையும்.

அஸ்தம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.

சித்திரை : தன்னம்பிக்கை மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

அரசாங்க உதவிகள் பெறுவதில் காலதாமதம் ஏற்படும். தொழில் ரீதியான பயணங்களால் சேமிப்பு அதிகரிக்கும். செய்தொழில் புரிபவர்கள் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். கடன்களை குறைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். செய்யும் செயல்களில் நிதானம் வேண்டும். சகோதரர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன் நிறம்

சித்திரை : காலதாமதம் ஏற்படும்.

சுவாதி : சேமிப்பு அதிகரிக்கும்.

விசாகம் : மனக்கசப்புகள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

நண்பர்களின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். நிர்வாகத்தில் உங்களின் தனித்திறமைகள் புலப்படும். உத்தியோகஸ்தரர்கள் பணி மேன்மைக்கான கூடுதல் பணிகளில் ஈடுபடுவீர்கள். வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். கொடுக்கல்-வாங்கலில் கவனம் வேண்டும். தொழிலில் கூட்டாளிகளால் சாதகமான சூழல் ஏற்பட்டு தனலாபம் அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : வாய்ப்புகள் உண்டாகும்.

அனுஷம் : திறமைகள் புலப்படும்.

கேட்டை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

மூத்த சகோதரர்களை அனுசரித்து செல்லவும். செய்தொழிலில் மேன்மை உண்டாகும். உத்தியோகஸ்தரர்கள் நிதானத்துடன் செயல்படவும். போட்டிகளில் பங்குபெற்று இலாபம் அடைவீர்கள். உடல் தோற்றப் பொலிவிற்கான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கடன்காரர்களால் ஏற்பட்ட மனவருத்தங்கள் குறையும். திறமைகள் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மூலம் : அனுசரித்து செல்லவும்.

பூராடம் : இலாபம் அடைவீர்கள்.

உத்திராடம் : மனவருத்தங்கள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். செய்யும் தொழில் புதுவிதமான மாற்றங்களை செயல்படுத்தி இலாபம் அடைவீர்கள். உறவினர்களுக்கிடையே உறவுநிலை மேம்படும். அறிமுகமில்லாத புதிய நபர்களால் அனுகூலமான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திராடம் : மாற்றம் உண்டாகும்.

திருவோணம் : மனம் மகிழ்வீர்கள்.

அவிட்டம் : உறவுநிலை மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

தாயின் ஆதரவினால் பொருட்சேர்க்கை உண்டாகும். அரசு பணிக்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மூத்த சகோதரர்களிடம் அனுசரித்து செல்லவும். பயணங்களின் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். நண்பர்களுக்கிடையே வீண் விவாதங்களை தவிர்க்கவும். புதிய முயற்சிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : முயற்சிகள் ஈடேறும்.

சதயம் : அனுசரித்து செல்லவும்.

பூரட்டாதி : விவாதத்தை தவிர்க்கவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

பொதுக்கூட்டப் பேச்சுக்களில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். அறச்செயலுக்காக நன்கொடைகள் கொடுத்து மகிழ்வீர்கள். புதிய தொழில் முயற்சிகளால் சுப விரயம் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய முடிவுகளை எடுக்கும்போது கவனத்துடன் இருக்கவும். பிறருக்கு எடுத்துரைக்கின்ற பேச்சுக்களால் அனுகூலம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

பூரட்டாதி : மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

உத்திரட்டாதி : சுப விரயம் உண்டாகும்.

ரேவதி : அனுகூலமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•