*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_ஆடி 25_*
*10.08.2019*
*_சனிக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் உருவாகும். தொழில் தொடர்பான புதிய முதலீடுகளை தவிர்ப்பது நன்மையை அளிக்கும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அசுவினி : அலைச்சல்கள் உருவாகும்.
பரணி : சிந்தித்து செயல்படவும்.
கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
எதிர்பாராத தனவரவு உண்டாகும். புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் குறையும். நண்பர்களின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். திருப்தியான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : தனவரவு உண்டாகும்.
ரோகிணி : ஆதரவு கிடைக்கும்.
மிருகசீரிடம் : திருப்தியான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வேலையில் மேலதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். உடல்நிலையில் சற்று மந்தநிலை காணப்படும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிடம் : மகிழ்ச்சி உண்டாகும்.
திருவாதிரை : வேறுபாடுகள் குறையும்.
புனர்பூசம் : செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
மனதில் புதிய தன்னம்பிக்கை உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவு மற்றும் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். இளைய உடன்பிறப்புகளிடம் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் அனுசரித்து செல்லவும். சுப முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
புனர்பூசம் : தன்னம்பிக்கை உண்டாகும்.
பூசம் : எதிர்ப்புகள் குறையும்.
ஆயில்யம் : அனுகூலம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
பொருளாதாரம் சார்ந்த செயல்பாடுகளில் மேன்மை உண்டாகும். தொழில் அபிவிருத்திக்கான முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்து வந்த எதிர்ப்புகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மகம் : மேன்மை உண்டாகும்.
பூரம் : முன்னேற்றமான நாள்.
உத்திரம் : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
உத்தியோகத்தில் எதிர்பார்த்து கொண்டிருந்த இடமாற்றம் சாதகமாக அமையும். தொழில் தொடர்பான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சுப முயற்சிகள் அனைத்தும் எண்ணிய முடிவுகளை கொடுக்கும். பழைய கடன்கள் குறைவதற்கான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திரம் : இடமாற்றம் உண்டாகும்.
அஸ்தம் : அனுகூலமான நாள்.
சித்திரை : இன்னல்கள் குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
குடும்பத்தில் சுபச் செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளிவட்டார தொடர்பு மற்றும் அறிமுகம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் காலதாமதமாக கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
சித்திரை : மகிழ்ச்சியான நாள்.
சுவாதி : ஆர்வம் அதிகரிக்கும்.
விசாகம் : அறிமுகம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
வெளியூர் பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பொருட்சேர்க்கை உண்டாகும். தந்தைவழி உறவுகளின் ஆதரவு மனதிற்கு புதிய நம்பிக்கையை கொடுக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். மனதில் தோன்றும் தேவையற்ற சிந்தனைகளால் குழப்பமும், கவலையும் உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
விசாகம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
அனுஷம் : புதிய நம்பிக்கை உருவாகும்.
கேட்டை : சுபச் செய்திகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்பட்டு மறையும். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் இருந்தாலும் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மூலம் : உடல் ஆரோக்கியம் மேம்படும்.
பூராடம் : இலாபம் கிடைக்கும்.
உத்திராடம் : மகிழ்ச்சி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
உடன்பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகத்தால் சுபிட்சம் உண்டாகும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
உத்திராடம் : வேறுபாடுகள் மறையும்.
திருவோணம் : வாய்ப்புகள் அமையும்.
அவிட்டம் : சுபிட்சம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான அலைச்சல்கள் ஏற்படும். தேவைகளை அறிந்து செலவு செய்வதினால் பணத்தட்டுப்பாடுகளை தவிர்க்க இயலும். குடும்ப உறுப்பினர்களிடம் மனம்விட்டு பேசுவதினால் நெருக்கடிகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அவிட்டம் : ஆசைகள் நிறைவேறும்.
சதயம் : அலைச்சல்கள் ஏற்படும்.
பூரட்டாதி : நெருக்கடிகள் குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
திட்டமிட்ட காரியங்கள் ஈடேறும். அரசு துறையில் உள்ளவர்களுக்கு கௌரவ பதவிகள் கிடைக்கும். தொழில் சார்ந்த முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். பிள்ளைகளுக்கு கல்வி தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : எண்ணங்கள் ஈடேறும்.
உத்திரட்டாதி : உயர்வு உண்டாகும்.
ரேவதி : சுபகாரியங்கள் கைகூடும்.
–
•┈┈•❀??????❀•┈┈•
