*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_பங்குனி 26_*

*_09.04.2019_*
*_செவ்வாய்க்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள். எண்ணிய முயற்சிகள் ஈடேறும். நிர்வாகத்தில் சாதகமான சூழல் உண்டாகும். கடன்களை அடைக்க முயல்வீர்கள். பொருட்சேர்க்கை உண்டாகும். தொழிலில் புதிய நபர்களை கூட்டாளிகளாக சேர்ப்பீர்கள். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

அசுவினி : முயற்சிகள் ஈடேறும்.
பரணி : பொருட்சேர்க்கை உண்டாகும்.
கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எந்தவொரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். கடன் தொல்லைகள் குறையும். தொழில் நிறுவனங்களை விரிவுப்படுத்த முயல்வீர்கள். மனதில் உள்ள சங்கடங்கள் குறைந்து தெளிவு பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

கிருத்திகை : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
ரோகிணி : நிதானம் வேண்டும்.
மிருகசீரிடம் : தெளிவு பிறக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

வாக்குவன்மையால் பெருமை அடைவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரம் சம்பந்தமான புதிய யுக்திகளை கற்றுக் கொள்வீர்கள். செய்யும் பணியில் மற்றவர்களின் விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடலாம்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிடம் : பெருமை அடைவீர்கள்.
திருவாதிரை : கருத்து வேறுபாடுகள் தோன்றும்.
புனர்பூசம் : புதிய யுக்திகளை பயில்வீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். உடல்நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி நலம் உண்டாகும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். கெளரவ பதவிகளால் மதிப்பு உயரும். வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு கூடும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

புனர்பூசம் : நலம் உண்டாகும்.
பூசம் : உதவிகள் கிடைக்கும்.
ஆயில்யம் : மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

வீண் அலைச்சல்கள் உண்டாகும். வாகனப் பயணங்களில் கவனத்துடன் செல்லவும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். தொழில் நிமிர்த்தமான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மகம் : அலைச்சல்கள் உண்டாகும்.
பூரம் : நிதானம் வேண்டும்.
உத்திரம் : மாற்றம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

பொருளாதார மேன்மைக்கான செயல்பாடுகள் எண்ணிய பலன்களை தரும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் இலாபம் அடைவீர்கள். பல நாட்களாக இருந்து வந்த சிக்கல்களை அமைதியாக கையாண்டு முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திரம் : புதிய நட்பு கிடைக்கும்.
அஸ்தம் : இலாபம் அடைவீர்கள்.
சித்திரை : சிக்கல்கள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணியில் உள்ளவர்களுக்கு வீண் கவலைகள் தோன்றும். செயல்பாடுகளில் சிறிது கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே உள்ள வாக்குவாதம் குறைந்து அன்பு அதிகரிக்கும். தந்தையிடம் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

சித்திரை : வீண் கவலைகள் தோன்றும்.
சுவாதி : அன்பு அதிகரிக்கும்.
விசாகம் : பணியில் கவனம் தேவை.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

பணியில் உள்ளவர்களுக்கு சாதகமான நிலை உண்டாகும். தாயின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க முயல்வீர்கள். வியாபாரத்தில் இருந்த போட்டிகளை சமாளித்து இலாபம் அடைவீர்கள். விரும்பிய பொருளை வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : சேமிப்பு உயரும்.
அனுஷம் : இலாபம் அடைவீர்கள்.
கேட்டை : ஆசைகள் நிறைவேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் வந்தடையும். வாக்குவாதத்தை தவிர்க்கவும். நண்பர்களின் மூலம் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் கருத்து மோதல்கள் தோன்றலாம். பயணங்களில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மூலம் : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
பூராடம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
உத்திராடம் : கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். அரசு அதிகாரிகளின் மூலம் சாதகமான நிலை ஏற்படும். வெளிநாட்டு பயணங்களால் கீர்த்தி உண்டாகும். புதிய தொழில் சம்பந்தமான முயற்சிகள் கைக்கூடும். பண விஷயங்களில் சாதுர்யமாக பேசி சமாளிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திராடம் : சாதகமான சூழல் அமையும்.
திருவோணம் : ஆதரவு கிடைக்கும்.
அவிட்டம் : வெற்றிகரமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் அடைவீர்கள். தாயின் ஆதரவினால் மனமகிழ்ச்சி ஏற்படும். பூர்வீக சொத்துகளால் நன்மை உண்டாகும். செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த பணிகள் முடியும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

அவிட்டம் : இலாபம் அடைவீர்கள்.
சதயம் : நன்மை உண்டாகும்.
பூரட்டாதி : செயல்வேகம் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

கடல் மார்க்க பயணங்களால் நன்மை உண்டாகும். பொருட்சேர்க்கை ஏற்படும். வாரிசுகளின் மூலம் சுப விரயம் உண்டாகும். உயர் கல்விக்கான முயற்சிகள் எதிர்பார்த்த பலன்களை தரும். கலைஞர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவார்கள். உடன்பிறப்புகளிடம் நிதானமாக நடந்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

பூரட்டாதி : நன்மை உண்டாகும்.
உத்திரட்டாதி : சுப விரயம் உண்டாகும்.
ரேவதி : கீர்த்தி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•