*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_சித்திரை 21_*

*04.05.2019*
*_சனிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம் :-*

அறச்செயல்களால் மேன்மையடைவீர்கள். வேலை செய்யும் இடங்களில் சக ஊழியர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். தொழிலில் மறைமுக எதிரிகளை கண்டறிவீர்கள். தொழில் சார்ந்த பயணங்களால் பொறுப்புகள் அதிகரிக்கும். கூட்டாளிகளால் அபிவிருத்திக்கான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அசுவினி : மகிழ்ச்சியான நாள்.
பரணி : நட்பு பெருகும்.
கிருத்திகை : விவேகத்துடன் செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

செயல்பாடுகளில் மந்தமானப்போக்கு உண்டாகும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். வழக்குகளில் இருந்த இழுபறிகள் குறைந்து சுமூகமான நிலை உண்டாகும். புதிய முயற்சிகளில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். மற்றவர்களிடம் உரையாடும்போது கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : தேன் நிறம்

கிருத்திகை : அமைதியாக இருக்கவும்.
ரோகிணி : பயணங்களால் இலாபம் உண்டாகும்.
மிருகசீரிடம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

புதிய தொழில் சம்பந்தமான சிந்தனையின் போக்கில் முன்னேற்றம் கிடைக்கும். பணிகளில் பொறுப்புகள் மற்றும் அதிகாரம் அதிகரிக்கும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான சூழ்நிலை உண்டாகும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் காலதாமதம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மிருகசீரிடம் : செயல்களில் வெற்றி கிடைக்கும்.
திருவாதிரை : சுபமான நாள்.
புனர்பூசம் :காலதாமதம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

பிள்ளைகளின் மூலம் ஆதரவான நிலை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். சமூக சேவை புரிபவர்களுக்கு சாதகமற்ற சூழல் உண்டாகும். வேலை செய்யும் இடங்களில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் புதிய உறுப்பினர்களின் வருகையால் சுபிட்சம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.
பூசம் : சுபிட்சம் உண்டாகும்.
ஆயில்யம் : வாய்ப்புகள் அமையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் சேமிப்பு அதிகரிக்கும். தந்தை வழி உறவுகளால் சுபச் செய்திகள் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவுகளை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

மகம் : சேமிப்பு அதிகரிக்கும்.
பூரம் : இலாபம் கிடைக்கும்.
உத்திரம் : முன்னேற்றமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

மனச்சோர்வுகளால் வேலையில் கவனமின்றி விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடலாம். உடல்நலத்தில் கவனம் வேண்டும். தம்பதிகளுக்கிடையே சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பொதுச் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமற்ற சூழல் உண்டாகும். நிதானத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திரம் : பணியில் கவனம் தேவை.
அஸ்தம் : பேச்சுகளில் கவனம் வேண்டும்.
சித்திரை : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் செயல்படுவதால் தேவையற்ற அவச்சொற்களை தவிர்க்கலாம். புதிய பொருட்களை வாங்குவதற்கான முயற்சிகள் கைக்கூடும். அயல்நாட்டு பயணங்களால் மேன்மையான சூழல் உண்டாகும். தொழில் அபிவிருத்திக்கான உதவிகள் சாதகமாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

சித்திரை : நிதானத்துடன் செயல்படவும்.
சுவாதி : பொருட்சேர்க்கை உண்டாகும்.
விசாகம் : பயணங்களால் நன்மை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த சுபச் செய்திகள் கிடைக்கும். வேலை விவகாரங்களில் சாதகமான சூழ்நிலை உண்டாகும். இளைய உடன்பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாக இருக்கவும். திட்டமிட்ட பணியில் சிறிது காலதாமதத்திற்கு பின்பு எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

விசாகம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
அனுஷம் : அனுகூலமான நாள்.
கேட்டை : எண்ணங்கள் ஈடேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்குவதற்கான ஆதரவுகள் உண்டாகும். நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் சக ஊழியர்களால் ஆதரவும், வழிகாட்டுதலும் கிடைக்கும். பாசன வசதிகள் மேம்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்.

மூலம் : சிக்கல்கள் நீங்கும்.
பூராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்திராடம் : நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

உறவினர்களிடம் வாக்குவாதத்தை தவிர்த்து அமைதியுடன் நடந்து கொள்ளவும். நிர்வாக துறையில் திறமைகளுக்கான அங்கீகாரம் மற்றும் கீர்த்திகள் கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த வரவுகள் காலதாமதமாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். சொத்துச்சேர்க்கைக்கான முயற்சிகள் கைக்கூடும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

உத்திராடம் : கீர்த்தி உண்டாகும்.
திருவோணம் : புதிய சிந்தனைகள் தோன்றும்.
அவிட்டம் : முயற்சிகள் கைக்கூடும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

தம்பதிகளுக்கிடையே உறவு மேம்படும். வாகனப் பயணங்களால் இலாபம் உண்டாகும். கண் சம்பந்தமான உபாதைகள் தோன்றி மறையும். கால்நடைகளின் மூலம் விரயம் உண்டாகும். நண்பர்களின் மூலம் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமான செய்தியை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

அவிட்டம் : உறவு மேம்படும்.
சதயம் : இலாபம் உண்டாகும்.
பூரட்டாதி : மகிழ்ச்சியாநாள்

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்பட்டு கீர்த்தி உண்டாகும். பொதுக்கூட்டப் பேச்சுகளில் எண்ணிய ஆதரவு கிடைக்க காலதாமதமாகும். மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் வீண் அலைச்சல்கள் மற்றும் பதற்றங்கள் உண்டாகலாம்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : மேன்மை உண்டாகும்.
உத்திரட்டாதி : சாதகமான நாள்.
ரேவதி : அலைச்சல்கள் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•