சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக இன்று பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .அப்போது சிலிண்டருக்கு மாலை அணிவித்தும் ,விலை உயர்வை கண்டித்து தொடர் முழக்கங்களும் எழுப்பப்பட்டன.ஆர்ப்பாட்டத்தின் போது மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
