சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள CJ நட்சத்திர ஹோட்டலுக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபரால்  வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு  கண்டறியும் போலீசார் விரைந்து  ஹோட்டல் முழுவதும் சோதனை செய்தனர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் போலி என்று தெரியவர  மின்னஞ்சல் அனுப்பிய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டலால்  ஹோட்டலில் சிறிதுநேரம் அச்சம் நிலவியது .