சேலம் மாநகராட்சிக்குட்பட்ட அஸ்தம்பட்டி மண்டலம் குமாரசாமிப்பட்டி நகர்ப்புற ஆரம்ப
சுகாதார நிலையத்தில் நியுமோகோக்கல் தடுப்பூசி செலுத்தும் பணி  தொடங்கியது.
முகாமினை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் இன்று துவக்கி வைத்தார்.
அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ் புதியவகை தடுப்பூசி PCV சேர்க்கப்பட்டுள்ளது.இது நியுமோகோக்கல் நிமோனியா, நியுமோகோக்கல் மூளைக்காய்ச்சல் மற்றும் செப்டிசீமியா போன்ற நோய்களுக்கு எதிரான பாதுகாப்பினை இந்த தடுப்பூசி வழங்கும்.
நியுமோகோக்கல் நிமோனியா என்பதுகடுமையான சுவாச நோய் தொற்றில் ஒரு வகையாகும்.இதனால் குழந்தைகளுக்கு சுவாசிப்பதில் சிரமம், காய்ச்சல் மற்றும் இருமல் போன்றவைகள் ஏற்படும். இவை கடுமையானதாக இருந்தால் அந்த குழந்தையின் மரணத்திற்கும் வழிவகுக்கும் நிலை ஏற்படும்.
( PCV ) தடுப்பூசி குழந்தைகளை 6 வார வயதிலிருந்து நோயின் அபாயத்திலிருந்து பாதுகாக்கிறது. இந்த தடுப்பூசி 3 தவணைகளாக 6 வாரங்கள், 14 வாரங்கள் மற்றம் 9 வது மாதத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. ( PCV ) தடுப்பூசி ஒரு பாதுகாப்பான மற்றும் நன்கு ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும்.
ஒரே வருகையின் போது பல தடுப்பூசிகள் கொடுப்பதால் பாதிப்புகள் எதுவும் குழந்தைகளுக்கு ஏற்படாது என்று பல ஆய்வுகள் தெரிவித்திருக்கின்றன,
எனவே தாய்மார்கள் இது குறித்த அச்சம் கொள்ளத்தேவையில்லை ( PCV) தடுப்பூசியின் மூலம் சேலம் மாநகராட்சியில் 1 வயதுக்குட்பட்ட 10 ஆயிரத்து 421 குழந்தைகள் பயனடையவுள்ளனர்.
இந்த தடுப்பூசி அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது.
எனவே பெற்றோர்கள் தங்களின் 1 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 3 தவணைகளிலும் தடுப்பூசி செலுத்தி, நிமோனியா மற்றும் மூளைக்காய்ச்சல் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுறார்கள்.