சேலம் மாநகராட்சியில் அம்மாபேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வீதிவீதியாக சென்று சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தெருக்களில் குப்பைகள் நாள்தோறும் அப்புறப்படுத்தப்படுகின்றனவா,சாக்கடை கழிவுகள் அகற்றப்படுகிறதா? என்பது குறித்து அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே கேட்டறிந்தார்.மேலும் வெளியில் செல்லும் போது பாதுகாப்பு கவசங்கள் அணிந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.
