மீன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:

  •  ¼ கிலோ மீன்
  •  150 கிராம் வெங்காயம்
  •  2 கப்  அரிசி
  •  150 கிராம் தக்காளி
  •  1 ஸ்பூன்  மிளகாய்த்தூள்
  •  2 ஸ்பூன்  இஞ்சி, பூண்டு விழுது
  •  புதினா, கொத்தமல்லி இலை – 1/4 கட்டு
  •  ¼ ஸ்பூன் மஞ்சள்தூள்
  •  1 ஸ்பூன்  தனியாத்தூள்
  •  ¼ கப்  தயிர்
  •  எண்ணெய்
  •  உப்பு தேவையான அளவு 

மீன் பிரியாணி செய்முறை:

            முதலில் மீனை சுத்தம் செய்து முள் நீக்கி துண்டு போடவும்.
             
             வெங்காயம், தக்காளியை பொடியாக நீள வாக்கில் நறுக்கவும். மிளகாயைக் கீறிக்கொள்ளவும். குக்கரில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் சேர்த்து தாளிக்கவும்.
     
             பின்பு வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி, புதினா, கொத்தமல்லி இலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும்.

             பின்பு தயிர் மற்றும் போதுமான அளவு உப்பு சேர்த்து மீனை வதக்கவும். தொடர்ந்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும்.

             பாசுமதி அரிசி ஒன்றரை பங்கும், சாதா அரிசி 2 பங்கும் சேர்த்து வேக வைக்கவும். பாத்திரத்தில் “தம்” சேர்த்து (ஆவி போகாமல் மூடி வைத்து) சிறிது நேரத்தில் இறக்கவும்.

             குக்கரில் ஒரு விசில் வந்ததும், குறைந்த தீயில் வைத்திருந்து அடுப்பை அணைத்து விடவும். இப்போது சுவையான மீன் பிரியாணி தயார்..