லாரி டிரைவரை ஏமாற்றி பணம் பறித்த குற்றத்திற்காக திருநங்கை கைது

 சேலம் மாநகரம் பள்ளப்பட்டி காவல் சரகத்தில் 19/ 3/ 19ஆம் தேதி இரவு லாரி ஓட்டுநரை ஏமாற்றி அழைத்துச் சென்று அவரிடம் இருந்து ரூபாய் 15 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டதாக லாரி டிரைவர் கொடுத்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் திரு.M. மூர்த்தி அவர்கள் வழக்கை பதிவு செய்தார். புலன் விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளர் திரு. சாலை ராம் சக்திவேல் அவர்கள், SI. திரு. முரளி, SSI. திரு.பச்சையப்பன், SSI. திரு. அறிவழகன், WPC. திருமதி ராஜேஸ்வரி ஆகியோர்கள் அடங்கிய குழுவை அனுப்பி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட திருநங்கையை 21/3/ 19ஆம் தேதி கைது செய்து அவரிடம் இருந்து ரூ.15 ஆயிரம் பணம் மீட்கப்பட்டது. குற்றவாளி மூன்றாம் பாலினமாக உள்ளதால் அரசு மருத்துவரால் மருத்துவச் சான்று பெறப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெண்கள் சிறையில் அடைத்தனர். மேலும் கடந்த 10 நாட்களுக்கு முன் அனைத்து திருநங்கைகளை அழைத்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட கூடாது எனவும், பொதுமக்களுக்கு இடையூறுகள் செய்ய கூடாது எனவும், காவல் ஆய்வாளர். திரு. சாலைராம் சக்திவேல் அவர்கள் எச்சரித்து அறிவுரை வழங்கி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. துரிதமாக புலன் விசாரணை மேற்கொண்ட பள்ளப்பட்டி போலீசாரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் பாராட்டி ஊக்குவித்தார்.