அரசு மதுபானக் கடையில் திருடிய 3 சிறுவர்களை பிடித்த போலீசாருக்கு பாராட்டு

சேலம் மாநகரம்  செவ்வாபேட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட குகை கருங்கல்பட்டியில் உள்ள சிவநாதன் தெரு அரசு மதுபானக்கடை மேற்கூரையை பிரித்து கடையில் இருந்த 51 மது பாட்டில்கள் திருடப்பட்டுள்ளதாக மதுபானக் கடையின் சூப்பர்வைசர் திரு. வடிவேல்துரை கொடுத்த புகாரை பதிவு செய்த காவல் ஆய்வாளர் திரு. பஞ்சலிங்கம் அவர்கள்  WSI.திருமதி.L.பூங்கொடி, தலைமையில் SSI.திரு. முருகேசன், SSI.திரு. செந்தில்குமார், SSI. திரு. சரவணன், மற்றும் HC. திரு. முருகேசன் ஆகியோர் அடங்கிய குழு CCTV Footage உதவியுடன் 21/03/19 ஆம் தேதி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று இளம் சிறார்களை பிடித்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நீதிபதி உத்தரவின் படி சேலம் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர். சிறப்பாக புலன் விசாரணை செய்த செவ்வாபேட்டை போலீசாரை மாநகர காவல் ஆணையர் அவர்கள்  பாராட்டி ஊக்குவித்தார்.