ஆனியன் சிக்கன் செய்ய தேவையான பொருட்கள்:

  •  ¼ kg சிக்கன்
  •  2 வெங்காயம்
  •  1 ஸ்பூன்  இஞ்சி, பூண்டு விழுது
  •  1 ஸ்பூன்  கரம் மசாலாத்தூள்
  •  கொத்தமல்லித்தழை – சிறிதளவு
  •  2 ஸ்பூன்  மிளகுத்தூள்
  •  3 ஸ்பூன்  எண்ணெய்
  •  உப்பு தேவையான அளவு

ஆனியன் சிக்கன் செய்முறை:

           முதலில் சிக்கனை நன்கு சுத்தம் செய்து விட்டு சிறு சிறுத் துண்டுகளாக்கி கொள்ளவும். மற்ற பொருட்களையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்.

           அடுத்து வெங்காயத்தை எட்டாக நறுக்கி அதை தனித் தனியே பிரித்து வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் இஞ்சி பூண்டு விழுதினை சேர்த்து வதக்கவும்.

           பின்பு மசாலாத் தூள்களை சேர்த்து சிறிது நேரம் வதக்கி உடனே சிக்கன் துண்டுகளையும் சேர்த்து வதக்கவும்.

          பின்பு தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு மிதமான தீயிலேயே பத்து நிமிடம் வேக விடவும்.(இடையில் இருமுறை கிளறி கொள்ளவும்.)

          சிக்கன் வெந்ததும், நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து பிரட்டி இரண்டு நிமிடத்தில் மல்லித்தழை தூவி இறக்கி விடவும்.

          இப்போது சூடான ஆனியன் சிக்கன் வறுவல் தயார்…இதனுடன் குடைமிளகாயையும் வெங்காயம் போல் நறுக்கி சேர்க்கலாம். இன்னும் நல்ல சுவையுடன் இருக்கும்.