தேவையான பொருட்கள்:
- 1 கிலோ சிக்கன்
- 100 கிராம் வெண்ணெய்
- 2 பெரிய பூண்டு
- 1 ஸ்பூன் கரம் மசாலா
- 1 ஸ்பூன் மிளகுதூள்
- 50 கிராம் உருளை கிழங்கு சிப்ஸ்
- 50 கிராம் மக்கா சோளமாவு
கார்லிக் சிக்கன் செய்முறை:
சிக்கனை கழுவி பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். இதில் வெண்ணெயை சமமாக தடவும்
பின் நறுக்கிய பூண்டு ,கரம் மசாலா,மிளகுதூள் இவற்றை சிக்கனுடன் கலந்து கொள்ளவும்
கடாயை சூடுபண்ணி சிக்கன் கலவையை போடவும்
வெண்ணெய் உருகியவுடன் உருளை கிழங்கு சிப்ஸ் மக்காசோளமாவு இவற்றை கலந்து கொள்ளவும்
சிக்கன் முறுகலாக வேகும்வரை அடுப்பில் வைக்கவும்.
