31.05.2020 ஞாயிறு காலை 8 முதல் 11 மணி வரை சேலம் மாநகர் தாதகாப்பட்டி ஸ்டேட் பேங்க் பின்புறமுள்ள அறிவு திருக்கோவில் வாசலில் நோய் எதிர்ப்பு சக்தி ஹோமியோபதி மாத்திரைகள் வழங்கும் மருத்துவ முகாம் மிக சிறப்பாக நடைபெற்றது. இம்முகாமில் மாநில நிர்வாக குழு அமைப்பாளர் K.தேவராஜ் தலைமை தாங்கினார். கௌரவ அழைப்பாளராக தலைமை மருத்துவர் டாக்டர் R. அன்பரசி அவர்களும், சிறப்பு அழைப்பாளராக மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினரும் மாவட்ட தமிழியக்கம் செயலாளருமான ஒ டெக்ஸ் ஏம்.எ. இளங்கோவன் அவர்களும், மாநில இளைஞரணி நிர்வாகச் செயலாளர் ஆர் வி பாபு அவர்களும், உயர்மட்ட குழு உறுப்பினர் வி. விஜய் ஆனந்த் அவர்களும், மாநகர ஒருங்கிணைப்பாளர் டி.எம்.எஸ் எம். மோகன்ராஜ் அவர்களும் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் சேர்ந்த நிர்வாகிகள் முன்னிலை வகுத்து அனைவரும் கலந்து கொண்டனர். மற்றும் (1000)குடும்பத்திற்கு என்று கூறியிருந்த நிலையில் கூட்டங்கள் அதிகமான காரணத்தால் (1500) குடும்பங்களுக்கு ஹோமியோபதி நோய் எதிர்ப்பு மாத்திரைகள் மிக சிறப்பாக வழங்கப்பட்டது. மாத்திரைகள் பெற்ற எல்லா பொது மக்களும் மக்கள் சட்ட உரிமைகள் நிர்வாகத்திற்கும் மற்றும் நிகழ்வு ஏற்பாடு செய்த அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி கூறி சென்றனர். செய்தி வெளியீடு :  சேலம் மாவட்ட நிர்வாகம்.