பி.மதியழகன் வீரமரணம்
ஜம்மு&காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டம் சுந்தர்பணி எல்லைப் பகுதியில் நடைபெற்ற மோதலில் #சேலம்_மாவட்டம்_எடப்பாடி_அருகே #உள்ள_ஸ்ரீரங்கைகாடு_என்ற_ஊரை #சேர்ந்த_நமது_ராணுவ_வீரர் #பி_மதியழகன்_வீர_மரணமடைந்தார்.

பாகிஸ்தான் படையினர் கடந்த சில நாட்களாக எல்லைக்கோட்டுக்கு அருகில் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். நமது ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இவ்வாறு நடைபெற்ற தாக்குதலில் வீரர் திரு.பி.மதியழகன் காயமடைந்தார். அவருக்கு உடனடியாக ராணுவ மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் அவர் மரணமடைந்தார்.
நாட்டிற்காக எல்லையில் வீர மரணமடைந்த பி.மதியழகனுக்கு நமது அஞ்சலியை செலுத்திடுவோம்.