சிக்கன் ஆம்லேட் செய்ய தேவையான பொருட்கள்:
- ¼ kg சிக்கன்
- 3 முட்டை
- 2 இஞ்சி
- 7 பச்சை மிளகாய்
- உப்பு – தேவையான அளவு
- 1 வெங்காயம்
சிக்கன் ஆம்லேட் செய்முறை:
முதலில் சிக்கனை சின்ன சின்னதாக அறிந்து கொள்ளவும்.
பின்பு இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் போன்றவற்றை அரைத்துக் கொள்ளவும்.
அதன் பிறகு சிக்கன் துண்டுகளுடன் அரைத்த மசாலா, உப்பு போட்டு கிளறி வைக்கவும்.
பின்பு குக்கரில் ஒரு டம்ளர் நீர் ஊற்றி ஒரு பாத்திரத்தில் சிக்கன்துண்டுகளை வைத்து குக்கரை மூடி வைக்கவும். ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.
பிறகு முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் வைத்து நன்கு நுரைக்க கலக்கி கொள்ளவும். அதன் பிறகு அதில் உப்பு போட்டு கலக்கவும்.
குக்கரில் வைத்து இருந்த சிக்கனை எடுத்து முட்டையில் போட்டு தோசைக்கல்லில் ஆம்லேட் ஆக ஊற்றவும்.
சுவையான ஆம்லேட் ரெடி. தேவைப்பட்டால் துருவிய சீஸ் சேர்த்துக்கொள்ளலாம்…
